உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் ஆற்றுப்படை விளக்கம் 25

ஒன்றியான்: இகரம், குற்றியலிகரம். அளவையின் காலத்துக்கு முன்னே..)

அப்போது முன்பே என்ைேடு பொருந்திய நண்பரைப் போல அவன் வந்தான். என்னுடன் உறவு கொள்ளுதலே விரும்பினன்.

கேளிர்போல ஒன்றிய கேள்கொளல் வேண்டி.

(பல நாளாக மனம் பொருந்திய நண்பனைப் போல என்னுடன் உறவு கொள்ளுதலே விரும்பி.

கேளிர் . நண்பர்; உறவினருமாம். கேள்கொளல் - நட்புக் கொள்ளுதல்.)

அவன் என்னிடம் அன்பாகப் பேசின்ை. இவனப் போன்றவனிடம் என்றுமே இருக்கலாமே என்று நான் விரும்பும்படி உபசார் வார்த்தைகளைக் கூறினன்.

வேளாண் வாயில் வேட்பக் கூறி.

(அவன் உதவி செய்வதற்கு வழியாகிய இரத்தல்

தொழிலேயே யான் எப்பொழுதும் விரும்பும்படி உபசார்

வார்த்தைகளைக் கூறி.

வேளாண் வாயில் - உதவி செய்தற்குரிய வழி. வேட்ட - இரத்தலேயே யான் என்றும் விரும்பும்படி கூறி. உபசார வார்த்தைகளைச் சொல்லி.1 -

என்ன உட்காரச் செய்தான் தன் பார்வையில் படும் படியாக அருகில் என்னை அமரச் செய்தான்.

கண்ணில் காண கண்ணுவழி இரீஇ.

தன்.கண்ணிலே கானும்படி தனக்கு அருகான இடத் திலே அமரச் செய்து. - -