உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

அளுர் - துன்பம்; வறுமையால் உண்டான துன்பம். பொத்திய - வருத்தம் பொருந்திய. மகிழ் - மகிழ்ச்சி, முதல் கிலேத் தொழிற் பெயர். - -

அப்போது, அவனுக்குரிய புகழ்களே முற்றக் கற்று என்பின் நின்ற இளையவர் அவற்றைச் சொல்லிக் காட்டி ர்ைகள். -

கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட.

- (அவனுக்குரிய புகழ்களை கற்று அங்குள்ள இளைஞர் கள் அவற்றை எனக்குச் சொல்வித் தெரிவிக்க. - -

கல்லா இளைஞர்' என்பதற்கு, “தத்தம் சிறு தொழி லன்றி வேறு ஒன்றும் கல்லாத இளைஞர்' என்று வேறு ஒரு பொருளும் கூறுவல் கச்சினர்க்கினியர். கல்லா என்பது சேய்யா என்னும் எச்சம்; கற்று என்பது பொருள். முதல் காள் வந்தவனப் போல இராமையால், கேற்று வந்தவன் இவன்' என்று சொல்லிக் காட்டினர்கள்.) . . . அந்த இளைஞர் கூறியவுடன், சற்றுக் காத்திருக் கட்டும்” என்று சொல்லாமல், அவர்களே விரைவில் அழைத்து வாருங்கள் என்று வாயிலோர்க்குக் கூறினன். நாங்கள் உள்ளே போனடேன், அருகில் வாருங்கள்' என்று அழைத்தான. r - • .

கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய் (விரைவில் அழைத்து வாருங்கள் என்று சொல்லி, எங்களைக் கண்டவுடன் அன்புடன் வாருங்கள் என்று அழைத்து. - - -

கதுமென-விரைவில். கரைந்து - சொல்லி. வம் என. வாருங்கள் என்று. கூஉய் - உரக்க அழைத்து: அன்பு தோன்ற அழைத்ததைக் குறித்தபடி. --