உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

வல்லே - விரைவில், அகறிரோ - போகின்றீரர. ஆயம்கூட்டம். சிரறியவன் போல் கோபித்தவனைப் போல. செயிர்த்த எமக்கு வருத்தத்தைச் செய்த, உண்மையில் கோபம் இல்லாத்வன் ஆதலின், சிரறியவன் போல் என்ருர்.)

கரிகாலன் வழங்கிய கொடை

பெண் யானைகளோடு சேர்ந்த ஆண் யான்களை, தம் அடிகள் உடுக்கையின் பக்கத்தை ஒத்த அசைந்த நடை யினை உடைய கன்றுகளுடனே விரும்பினவற்றை ஏற்றுக் கொள்வாய்ாக என்று சொன்னன்.

துடிஅடி அன்ன தூங்குநடைக் குழவியொடு பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கென

(உடுக்கையின் அடியைப் போன்ற அடியால் அசைந்த நடையைக் கொண்ட யானைக் கன்றுகளுடனே பெண் யானைகளுடன் சேர்ந்த ஆண் யானைகளை விரும்பியவற்றை ஏற்றுக் கொள்க என்று சொல்லி.

துடி - உடுக்கை. அடி - பாதம். துரங்கு நடை - அசையும் நடை. குழவி - யானைக் கன்று. பிடி - பெண் பாகின. வேமும் - ஆண் யானே. பெட்டவை - விரும்பிய வற்றை. தமக்கு எவை வேண்டுமோ அவற்றைத் தேர்ந்து ஏற்றுக் கொள்வீர்களாக என்ருன்.

. பின்னும் ஊர்திகள், ஆடைகள், அணிகலன்கள் முதலியவற்றைத் தான் அறிந்த அளவாலே மேன்மேலே தந்தான். • . . . . -

தன் அறி அளவையில் தாத்தர.

தான் விரும்பியிருந்த ஊர்திகள் முதலியவற்றை மேன்மேலே தர. ஒன்றன்பின் ஒன்ருக வரிசையாகத்