உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பொருநள் ஆற்றுப்படை விளக்கம்

தமக்கு முறைமை செயவேண்டி வந்து சில சொன்னல் அச் சொல் முடிவுகண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம் பாத இளமைப் பருவத்தான் என்று இகழ்ந்த கரை முது மக்கள் உவக்கும் வகை நரைமுடித்து வந்து முறை வேண்டி வந்த இரு திறத்தாரும் சொல்லிய சொற் கொண்டே ஆராய்ந்து அறிந்து முறை செய்தான் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன்’ என்று பழமொழி என்னும் நூலின் உரையில் ஒரு செய்தி வருகிறது. இதல்ை கரிகால் வளவன் வழக்கிடுவார் இரு திறத்தாரும் ஏற்கும் வகையில் முறை வழங்கினன் என்பது பெறப்படும்.

இனிச் சோழ நாட்டைப் பார்ப்போம்.

அங்கே மயில்கள் பல உள்ளன. பசிய பாகற் பழத்தை யும் சிவந்த சுளையை உடைய வாகிய பாலாப் பழத்தையும் தின்று, வளைந்து வளர்ந்த காஞ்சி மரத்திலும் செவ்விய மருத மரத்திலும் அந்த மயில்கள் தங்கி, தம்முடைய பெடை மயில்கள் ஆரவாரித்து அழைக்கும்படியாக அங்கு நின்றும் போகின்றன.

முடக் காஞ்சிச் செம்மருதின் மடக்கண்ண மயில் ஆலப் ைபம்பாகற் பழந்துணரிய செஞ்சுளைய கனிமாந்தி. வகாந்த வளர்ந்த காஞ்சி மரத்திலும் செம்மை நிறம் பொருந்திய மருத மரத்திலும், இளமையையுடைய பல கண்களே உடைய மயில்கள் ஆட பசியபாகற் பழத்தின் பழங்கள் கொத்துக் கொத்தாக உள்ள சிவந்த சுளையை உடைய பழத்தை உண்டு. :

மடிக்கண் - அறியாமையை உடைய கண் என்பதும் ஆம். கண் என்றது தோகையிலுள்ள பல கண்களே.