உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருகர் ஆற்றுப்படை விளக்கம் 65

அங்கே தேனையும் கிழங்கையும் கொண்டு போய் விற்கிருர்கள். அவற்றிற்குப் பதிலாக மீன நெய்யையும் நறவையும் வாங்கிச் செல்கிருர்கள்.

தேன் நெய்யொடு கிழங்குமாறியோர் மீன் நெய்யொடு கறவுமறுகவும். - (தேனுக்குத் தேனெய் என்பது ஒரு பெயர். கிழங்கு - பலவகைக் கிழங்குகள். மாறியோர் - விற்றவர்கள். மீன் நெய் - மீனின் கொழுப்பிலிருந்து உண்டாக்கிய நெய். நறவு - கள். மறுக - வாங்கிச் செல்ல.)

இனிய கரும்புகளையும் அவலேயும் கூறுபடுத்தி, விற்கி ருர்கள் சிலர். அவர்கள். அவற்றுக்குப் பதிலாக மான் தசையோடு கள்ளையும் வாங்கிக்கொண்டு செல்கிருர்கள்.

திங்கரும்பொ டவல்வகுத்தோர் மான்குறையொடு மதுமறுகவும். - - - திங்கரும்பு - இனிய கரும்பு வகுத்தோர் கூறு படுத்தி விற்றவர்கள். மான்குறை - மான் தசை. மது , கள். மறுக - வாங்கிச் செல்ல.)

. குறிஞ்சி நிலத்தில் உள்ளவர்கள் மிகுதியாகப் பாடுவ்து குறிஞ்சிப்பண். அந்தக் குறிஞ்சியை கெய்தல் நிலத்தி லுள்ள பரதவர் பாடுகிருர்கள். நெய்தல் நிலத்திற்குரியது. நெய்தல்யூ. அதனுடைய மணமுள்ள கண்ணியை மலைவாழ் குறவர் சூடுகிருர்கள். -- - - .

குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல் கறும்பூங் கண்ணி குறவர் சூட. - (குறிஞ்சிப்பண்ணே நெய்தல் நிலத்தில் உள்ள பரதவர் பாடவும், நெய்தல் நிலத்தில் உள்ள மணம் பொருந்திய கண்ணியை மலைவாழ் குறவர் குடவும்.