உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருகர் ஆற்றுப்படை விளக்கம் 77

இரட்டைத் தாளத்திற்குப் பொருந்த ஒரு பாட்டினே யான் பேணிப் பாடுவதற்கு முன்னே, விடிகின்ற கிரணங். களே உடைய வெள்ளி எழுந்த, செறிந்த இருளை உடைய விடியற் காலத்தே, முன்பே தன்னேடே பொருந்திய நட்டாரைப் போல என்னுடன் உறவு கொள்ளுதலே விரும்பி, தான் உபசரித்தற்கு வழியாகிய இரப்பினேயே யான் எப்பொழுதும் விரும்பும்படி உபசாரங்களேக் கூறி, தன் கண்ணிலே கானும்படி தனக்கு அண்ணிதான இடத் திலே என்னே இருத்த, தன்னைக் கண்ணுற் பருகும் தன்மையை ஒத்த கெடாத பார்வையாலே. என்பை உருகும் மெழுகு முதலியன போல் நேகிழும்படி குளிர்ச் சியை உண்டாக்கி, சரும் பேனும் கூடியிருந்து அரசாண்டு, வேர்வையாலே கனேந்து சரகுகள் உள்ளே ஒடுதற்குக் காரணமான தைத்தல் தொழிலையுடைய சீரையை என் னிடத்தினின்றும் போக்கி, கண் ணிற் பார்வை, இஃது இழைபோன வழியென்று குறித்துப் பார்க்க வராத துண்மையையுடையனவாய்ப் பூத்தொழில் முற்றுப்பெற்ற தன்மையால் பாம்பினது தோலை ஒத்த துகில மிக நல்கி, இழைகளே அணிந்த அழகினேயுடைய பாட்டாலும் கூத்தா லும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யும் மகளிர், உண்டார் மயங்குதலைச் செய்யும் கள்ளை மழை என்னும்படி மாடத்திலே பல்காலும் வார்த்து, ஒட்டமற்ற பொன்ல்ை செய்த வட்டில் கிறையத் தரத்தர, வழிபோன வருத்தம் போகும்படி நிறைய உண்டு, கள். உண்ணப் பெறுகிலேம் என்று கெஞ்சிற் கிடந்த பெரிய வருத்தத்தையும் போக்கி, மகிழ்ச்சியுடனே நான் கின்ற அந்திக் காலத்தே, இங்ங்னம் மிடி தீர்ந்த பின்பு அவனு டைய செல்வம் விளங்குகின்ற அரண்மனேயின் ஒரு பக்கத்தே கிடந்து, மிக்க தவத்தைச் செய்கின்ற மாக்கள் தம்முடைய தவம் செய்த உடம்பைப் போடாதே இருந்து அத் தவத் கால் பெறும் பயனேப் பெற்ற தன்மையை ஒப்ப, வழி போன வருத்தத்தை என்னிடத்தில் சிறிதும் கில்லா மல் போக்கி, கள்ளின் செருக் கால் உண்டான மெய்க்