உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

தோறும் நெற்கூடுகள் பொருந்தியிருக்கும். தாழ்ந்த தென்ன மரங்களை உடைய குளிர்ந்த மரச் சோலைகளில் இருக்கின்ற குடிமக்களிடத்தில், உதிரத்தால் சிவந்த சோற்றையுடைய வலியை விழுங்கின. கரிய காக்கை, மனேயைச் சூழ்ந்த கொச் சியின் கிழலிலே கிடந்த ஈன்ற ஆமையின் குட்டியைத் தான் தின் மலை வெறுத்ததாயின், அதனேப் பின்பு பசித்த காலத் தில் தின்பதாகப் பாதுகாத்து வைக்கவும், அவ்வுமுவர் மகளிர் நெய்தல் நிலத்தின் மணற் குன்றிலே வண்டல் இழைத்து விளயாடவும், பகைமை முதிர்ந்தோர் தனது அரசவையில் சென்று புகும் காலத்தில் தம் மாறுபாட் டைப் போக்கும்படியாகவும், ஆண்டவன் கரிகாலன். .

பசிய பாகற் பழத்தையும் சிவந்த சுளையை உடையன

வாகிய குலைகளை உடைய பலாப்பழத்தையும் கின்று

வளைவையுடைய காஞ்சி மரத்திலும் செவ்விய மருத மரத் திலும் இருந்த,மடப்பத்தைத் தம்மிடத்தே உடையவாகிய பெடை மயில்கள் ஆரவாரித்து அழைக்கும்படி அங்கு நின்றும் போய், யாழோசை போன்ற வண்டின் பாட்டைக் கேட்டு அதற்குப் பொருந்தத் தோகையை விரித்த அறியாமையை உடைய மயில், நிலவு போன்ற இடுமண லிலே பலபகுதிப் பட ஆடவும், காட்டில் வாழ்வார் அறுத் தலைச் செய்யும் கரும்பின் கண்ணும் அரிகின ற கெல்லின் கண்ணும்.எழுப்பின திரண்ட களமருடைய ஓசை மிகுதி. யினலே, நீர் அற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும் படர் கின்ற பகன்றையினேயும் தளிரையுடைய புன்கினேயும் தாழ்ந்த சேலேகளையும் உடையதாய், அரும்பின ஞாழ லோடே. ஏனே மரங்களும் திரண்ட அங்காட்டை வெறுத் தார்களாயின், அவ்விடத்தை நீங்கி நெஞ்சாலே கைவிட்டு, நீல நிறத்தை உடைய, முல்லைக் கொடி படர்ந்த பலகாட்டு கிலத்தே சென்று அங்கிலத்தைக் கொண்டாடவும், முல்லை கில்த்து வாழ்வோர் அவிழ்கின்ற தளவினையும் பரந்த தோன்றியினையும் அலர்கின்ற முல்லையினையும் பூ உகுகின்ற தேற்ருவினையும் பொன்னேப் போன்ற பூவினையுடைய