பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

குறிப்பு :

1. மேலே உட்கார்ந்திருப்பவர் தான் தன்னுடைய குழுவை நடத்திச் செல்ல வேண்டும்.

2. எந்தக்காரணத்தை முன்னிட்டும் ஒருவருக்கொருவர் கோர்த்து இருக்கின்ற பிடியினை விட்டுவிடக்கூடாது. அவ்வாறு அறுத்துக் கொண்டு ஒடுகின்ற குழு வெற்றி பெறும் தகுதியினை இழந்து விடுகிறது.

3. குழுவின் கடைசி ஆட்டக்காரர் எல்லைக் கோட்டை கடந்தால்தான் அந்தக்குழு எல்லையை அடைந்ததாகக் கருதப்படும்.

4. மேற்கூறிய முறையில் நான்கு குழுக்களையும் ஐந்துமுறை ஒடவிட்டு, அந்த ஐந்து முறைகளில் அதிக எண்ணிக்கையில் எந்தக்குழு வெற்றி பெற்றதோ அந்தக் குழுவே வென்றது என்று அறிவிக்கலாம். . -