பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேவல் பிரசங்கம் 135

ஒரு கையால் அடிப்பதும் ஒரு கையால் அணேப்பதும் இராஜதந்திரமாகையால் இப்படிக் கூறிவிட்டு,

“ ஆல்ை ஸ்காட்லாந்து, கானடா, ஸ்விட்ஜர்லாந்த், அமரிக்கா, ரஷ்யா முதலிய தேசங்களில் வகுப்புப் பிரச்சினையைத் தீர்த்திருப்பதால் நீங்களும் அவைகளை ஆராய்ந்து ஒற்றுமைக்கு வழி காணலாம்” என்று யோஜனே கூறினர்.

ஆனல் அங்கெல்லாம் சர்க்கார் குதிரைக்கு முன் ல்ை வண்டியை நிறுத்தாமல், வண்டிக்கு முன்னல் குதிரை ைேயப் பூட்டினர்கள் என்பது நமக்குத் தெரியாதென்று எண்ணிவிட்டாரோ என்னவோ, அந்த நாடுகளின் சரித் திரங்களே ஆராய்ந்துதான் காங்கிரஸ் மகா சபையாரும் அங்குபோல் இங்கும் சுதந்திரம் வழங்கினுல்தான் ஒற்றுமை உண்டாகும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

அது போகட்டும் ஒற்றுமையுண்டானுல்தான் சுதக் திரம் என்று கூறுகிருரே ஒற்றுமை உண்டாக்க இவர் என்ன செய்தார் ? இவராக ஒன்றும் செய்யவும் இல்லை, பிறர் செய்ய இடம் தரவும் இல்லை, காரியக் கமிட்டி யாரையும் காந்தியடிகளேயும் விடுவித்து சிக்கலேத் திர்த்து வைக்கும்படியாக ஒன்றரை வருஷகாலமாக இந்தியா, அமரிக்கா, இங்கிலாந்து, மூன்று தேசங்களிலிருந்தும் வேண்டுகோள் இடைவிடாமல் குவிந்தவண்ணமாக இருக் கின்றதே. அதை இவர் கொஞ்சமேனும் லட்சியம் செய்யாமல் சட்ட சபையில் காங்கிரஸ் ஒத்துழைப்பதாக இன்னும் காட்டிக்கொள்ளவில்லே, எப்படி விடுதலை செய்வது என்று கேட்டார்.

காங்கிரஸ் ஒத்துழைப்பதென்றால் சர்க்கார் அகராதி

யில் ‘ ஆகஸ்டுத் தீர்மான ரத்து-அட்டுழிப் பொறுப்பு ஏற்பு “ என்பதே பொருளாகும்.