பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பொழுது புலர்ந்தது

முஸ்லிம் லீகோடு ஒத்துப் போவதற்காகப் பெரு முயற்சி செய்துவந்த ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் முஸ் வீம் லீகர்கள் முஸ்லிம் லீக்கில் சேராதவர்களைப் பரி பூரணமாக விலக்கிவிடவேண்டும் என்று சொல்வதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என்று கூறினர்.

மஹாநாடு முறிவு

மஹாகாடு இறுதியாக ஜூலை 14-ந்தேதி கூடிற்று. அப்பொழுது வைசிராய் முஸ்லிம் லீக் ஜாப்தா கொடாத தால் மஹாகாடு தோல்வியுற்றதென்று அறிவித்தார். அத்துடன் மஹாகாடு தோல்வியுற்றதற்குத் தாமே பொறுப்பாளி என்றும் சொல்லிக் கொண்டார்.

ஆல்ை உண்மையில் மஹாநாடு முறிந்ததற்கு முஸ் லிம் லீகின் கியாயமற்ற பிடிவாதமே காரணமாகு மென்று மெளலான ஆஸாத் கூறினர். அது மட்டுமன்று. காங்கிரசையோ லீகையோ சேராத இரண்டு தேசிய முஸ்லிம்களைச் சேர்க்க முஸ்லிம் லீக் சம்மதித்தால் காங் கிரஸ் முஸ்லிமை சேர்க்க வேண்டுமென்று தாம் வற் புறுத்தப் போவதில்லை என்று முஸ்லிம் லீக்கிடம் கூறிய தாகவும் சொன்னர்.

மஹாகாடு முறிந்ததின்பின் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி யார்,

“வேவல் பிரபு மஹாகாடு கூட்டியதன் கோக்கத்தை காம் தவருக அர்த்தப்படுத்திக்கொண்டோம் என்று தோன்றுகிறது. ஜின்ன ஒப்புக்கொண்டால் நிர்வகா சபையுண்டு, ஜின்ன ஒப்புக்கொள்ளாவிட்டால் நிர்வாக சபையில்லை என்று வேவல் முன்கூட்டியே சொல்லி யிருந்தால் வீனை சிரமம் வேண்டாமென்று நாம் அவ ரிடம் முன் கூட்டியே சொல்லியிருப்போம்”

என்று பத்திரிகைப் பிரதிநிதியிடம் கூறினர்.