பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 257

என்று உனக்கு அச்சம் ஏற்படவில்லையா?’ என்று கேட்டார்.

‘இல்லை, இந்தப் பாத்திரம் மிக மலிவானது; இது உடைந்தால் அந்த நஷ்டமில்லை!’ என்றான் குமரன்.

அப்போது பகவர் சொன்னார்: ‘உன் விஷயத்தை இப்போது எண்ணிப் பார்! எல்லையற்ற பிறவிகள் என்னும் சுழலிலே உன் உடல் சிக்குண்டு சுழன்று வருகிறது; உன் உடலும், மற்ற உடைந்து சிதறும் பொருள்களைப் போலவே, அதே பொருள்களால் ஆக்கப் பட்டிருக்கின்றது. ஆதலால் அது உடைந்து விட்டால், அதிகச் சேதமில்லை. பொய்கள் பேசும் இயல்புடையவன் ஞானிகளால் வெறுத்து ஒதுக்கத்தக்கவன்.’

இராகுலனுக்கு வெட்கம் அதிகமாகி விட்டது. பகவர் மீண்டும் அவனுக்குப் போதிக்க ஆரம்பித்து ஓர் உபதேசக் கதை கூறினார்;

‘ஓர் அரசனிடம் வல்லமையுள்ள யானை ஒன்றிருந்தது; அது ஐந்நூறு சாதாரண யானைகளைத் தனியே எதிர்த்து நிற்கும் ஆற்றலுள்ளது. அந்த யானை போருக்குச் செல்லுகையில், அதன் தந்தங்களில் கூர்மையுள்ள நீண்ட வாள்களைக் கட்டுவார்கள்; கால்களில் ஈட்டிகளைக் கட்டுவார்கள்; வாலில் ஒரு இரும்புக் குண்டைக் கட்டுவார்கள். யானைப்பாகன் ஆயுதங்களோடு விளங்கும் யானையைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைவான். அதன் துதிக்கையில் அம்புப் பட்டுச் சிறு புண் ஏற்படினும், அதன் உயிருக்கு அபாயம் என்பதை உணர்ந்து, அவன், யானை தன் துதிக்கையை நன்றாகச் சுருட்டிக் கொண்டிருக்கும்படி பழக்கி வைத்திருந்தான். ஆனால் போர்க்களத்திலே அந்த யானை ஒரு வாளைப் பற்றுவதற்காகத் துதிக்கையை வெளியே நீட்டி விட்டது. பாகன் மனத்திலே கலவரமடைந்து, அரச-