பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

ஆனால் சித்தார்த்தர் அதை வெளியே தள்ள மறுத்தார். உலகின் துக்கத்தையெல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டுமென்று கிளம்பிய உத்தமர் பிச்சைச் சோற்றுக்குப் புறங்கொடுத்து ஓட முடியுமா? எப்படியோ உள்ளத்தில் உரமேற்றிக் கொண்டு அவர் அதை உண்டுவிட்டார். அது முதல்—அதாவது, அவருடைய 20 வயது முதல்—80 வயது வரை அவர் பிச்சைச் சோறே உண்டு வாழ்ந்தார்!

வாழ்நாள் முழுதும் ஒரு கடுஞ் சொல் அவர் வாயிலிருந்து வந்ததில்லை. அவர் செவிகளும் தீ மொழிக்கு அடைத்த செவிகள். மூர்க்கமான விலங்குகளும் செந்தாமரை போன்ற அவர் திருமுகத்தைப் பார்த்தால் சினம் தணியுமென்றால், மக்களைப்பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை.

ப. ராமஸ்வாமி