22
போராட்டம்
கட்டளை என்று கூறுவார். இப்படியே மோகனமியற்றுவர். அண்ணாத்துரையே கொடு ரூ,25,000 என்று என்னைக்கேட்டால், நான் ஹர! ஹர சிவ சிவ சம்போ என்று ஓடு எடுக்க வேண்டியதுதான்.
ஆகவே பஞ்சத்தாண்டிகளான நம்மால், பொது மக்களின் ஆதரவால் சேர்க்கப்பட்டதுதான் இதோ உங்கள் முன் காட்சியளிக்கும் இரண்டு லாரி ஆடைகள். அதைக் கண்டு பூரிப்படைகிறேன். உள்ளம் மகிழ்கிறேன். வழங்கப்படவிருக்கும் துணிகள் உயர்ந்த ரகத் துணிகளல்ல ! எல்லாம் முரட்டுத் துணிகள் மண்வெட்டும் மக்களுக்கு மானமிழந்த மங்கையருக்கு.
இது மகத்தான காரியம் மட்டுமல்ல. உள்ளபடியே நமக்கு மகிழ்ச்சியும். மாற்றாருக்கு மிரட்சியையும், ஆட்சியாளருக்கு அதிர்ச்சியையும் தரக்கூடியது.
புயல் தந்த தொல்லைப் பரிசுகளை அனுபவித்துள்ள தஞ்சை, திருச்சி, பெருங்குடி மக்களுக்கு செல்லவிருக்கும் இந்த ஆடைகளை உள்ளபடியே அரசியலார் சார்பில் செலுத்தத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால் திராவிடத்தின் துரதிருஷ்ட வசத்தினால் தென்னாட்டுக் கவர்னர் தமிழரல்ல. திராவிடம் பெற்ற திருமணியல்ல! ஆனால், வடநாட்டின் வாரிசு, டெல்லி ஆட்சியின் கைப் பாவை. செந்தமிழறியாத செல்வ பூபதி. நேருசர்க்கார் நேரடியாக அனுப்பிய முதலாளித்துவத்தின் பிரதிநிதி. அந்தத் துக்ககர-