உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:போர் முரசு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முரசு 9 தயாராக, அவர்கள் புகைப்படங்களுடன் வைத்திருக்க வேண்டுமாம். மன்னர், தமக்கு வேண்டிய கனிகளை அவ் வப்போது சுவைத்துக் கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடாம் இது ! பரூக்கின் மூளை சுறுசுறுப்பாய்த்தான் வேலை செய்திருக்கிறது இந்த விஷயத்தில்! ஆனால் ஏழையர் வாழும் நாட்டிலே எத்தனை நாளைக்கு நீடிக்கும் இந்த வாழ்வு என்பதை அவனால் அறிந்து கொள்ள . முடியவில்லை. நாளை, இன்றில்லாவிட்டால், ஏழை எரிமலையா வான், நாட்டில் புரட்சி கிளம்பும், அதற்கேற்ற ஒரு தலைவனும் தோன்றுவான் என்று அவனால் உணரமுடியவில்லை. அதன் விளைவுதான் ராணுவத் தலைவன் ஜெனரல் நஜீபின் கட்டளைக்குப் பணிந்து சிம்மாதனத்தை விட்டு இறங்கியது மல்லாமல், கண்ணீரும் கம்பலையுமாக. தான் காதலித்து மணம் புரிந்த காரிகையுடன் கப்பல் ஏறி நாட்டை விட்டே வெளியேற வேண்டிய ‘பரிதாபம்' ஏற்பட்டது! இங்கு, இந்தியாவில் சமஸ்தான மன்னர்கள் என்றழைக் கப்பட்ட உல்லாச புருஷர்கள் புரிந்த லீலைகள்மட்டும் கொஞ்சமா? அவர்களின் களியாட்டங்கள் கணக்கிலடங் குமா? பெயர்தான் பரோடா மன்னர்; பரவசந்தரும் படாடோப வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்ட இடம் லண்டன் மாநகரம்! பெயர்தான் போபால் மன்னர்; போக போக்கியங்களில் புரள வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் தங்கியது பாரிஸில்! இப்படி குடிகளைக் கசக்கிப் வசூலித்த வரிப்பணத்தை யெல்லாம் பிழிந்து வகையான இன்பம் சுவைப்பதில் வாரி இரைத்து வந்தனர். இராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டியவர்கள் ரசாபாசத்தில் திளைத்திருந்தனர். உயரிய வாழ்க்கைக்கு வழி காட்டவேண்டிய உத்தமர்கள் உன்மத்தர்களாயிருந்தனர். பலன், இன்று இராஜப் பிரமுகர்கள் என்ற பெயரோடு திருப்தி யடையவேண்டிய இஸ்பேட் ராஜாக்களாகி விட்டனர்! வகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போர்_முரசு.pdf/10&oldid=1706581" இலிருந்து மீள்விக்கப்பட்டது