உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:போர் முரசு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முரசு 11 நேருக்கு நேர் பலப் பரீட்சை இல்லை. ஒரு புறம் தோள் பலமும் மற்றொரு புறம் சாணக்கியமும் நின்று சமர் புரிகிறது. ஆச்சாரியார் ஆட்சியைக் கவிழ்க்க அக்டோபர் அதிர்ச்சியைக் 'காமராஜர் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அதே நேரத்தில் ஆச்சாரியார் காமராஜரைக் கவிழ்க்க கச்சைக் கட்டிக் கொண்டிருப்பதைக் காணும்போது இராவணன் கயிலையைப் பெயர்த்த கதைதான் நினைவுக்கு வருகிறது. மறந்திருப்போர் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தெரியாதவர்கள் பஜகோவிந்தம் பாடும் தோழர்கள் யாரையாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பரமசிவன் பரவச நிலையில் கயிலையில் அமர்ந்திருந்த நேரத்தில், அந்தக் கயிலையை இராவணன், தன் தோளின் வலிமையால், புஜபல பராக்கிராமத்தால், இரும்பு போன்ற தன் கரங்களால் அசைக்க, அது கடகடவென நடுங்க, அதைக் கண்ட கைலாச பதியான அந்தக் கடவுள் தனது கட்டை விரலால் அந்தக் கயிலையை அழுத்த, அதன் அடியில் இராவணன் சிக்கி, பின் தனது கையை வெட்டி, வெட்டிய கையை வீணையாக அமைத்து, அமைத்து, கானம் கானம் எழுப்பி, டவுளைக் களிப்பித்து மீண்டானாம்! இது கதை. கட காண, அம்மாதிரிதான், காமராஜர் என்ற இராவணன் ஆச்சாரியார் ஆட்சி என்ற கயிலையை அசைக்க, அது ஆட்டம் பின் தனது கட்டை விரலான சி. சுப்பிரமணியத்தின் உதவியால் கயிலையை அழுத்தி அந்த ஆட்டத்தை நிறுத்தப்பார்க்கிறார். இது நிலை. முடிவு என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், பகத்சிங்கால் பாதுகாக்கப்பட்ட காங்கிரஸ் ஷான், திருப்பூர் குமரனால் காக்கப்பட்ட காங்கிரஸ்தான், உப்புச் சத்தியாக்கிரகத்தில் தன் உயிரை ஈந்த தில்லையாடி வள்ளியம்மையால் வளர்க்கப்பட்ட காங்கிரஸ்தான், பதவி, பதவி, பதவி என வெறிபிடித்து அலையும் வெறியர்களின் விளையாட்டு அரங்கமாக மாறிவிட்டது! அந்த வெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போர்_முரசு.pdf/12&oldid=1706583" இலிருந்து மீள்விக்கப்பட்டது