உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:போர் முரசு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முரசு 21 குலுங்கும் அழகிய தோட்டத்திற்கிடையே அமைந்த விடுதியில் முதலாளி குடித்துக் களித்துக் கொண்டிருந்த காட்சியும், வேலை முடிந்ததும் வீடு திரும்பிய தொழிலாளி கிடைத்த கூலியைக் கொண்டு தன் ஆசைக்குரிய மனைவி, அப்பா அப்பா என்று அன்போடும் அழைக்கும் குழந்தை களுக்கு அரை வயிற்றுக் கஞ்சியும் வார்க்க முடியாமல், என்றுதீரும் இந்த அவதி என ஏங்கிய காட்சியும், அதே நேரத் தில் இந்த தொழிலாளியின் இரத்தத்தைப் பணமாக்கி மாட மாளிகைகள் அமைத்துக் கொண்ட முதலாளி, கோமளாங்கி ஒருவள் தன் வளைகரத்தால் பளபளக்கும் வெள்ளித் தட்டுகளில் தரும் பல்சுவை பண்டங்களையுண்டு, தின்றது செறிக்க ஜீரணாதிலேகியம் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சியுந்தான்! இந்தப் பயங்கரக் காட்சிகள் தான் மார்க் ஸின் சிந்தனையைக் கிளறின. அவை மறைந்தொழிவதற் கான மார்க்கத்தையும் காட்டினார். அதுதான் இன்று மார்க் ஸீயம் என்ற பெயரில் உலகம் போற்ற உலவி வருகிறது. மக்களின் ஆனால் அதே மார்க்ஸ், அறிஞர் மார்க்ஸ், குறைபாடுகளை, அவதியை அல்லலைத் தெற்றெனத் தெரிந்து கொள்ளும் நுண்ணறிவு படைத்த மார்க்ஸ். இந்நாட்டில் பிறந்திருந்தால் இன்று நாங்கள் சொல்லும் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்கள் எல்லாம் ‘மார்க்ஸீயம்’ என்ற பெயரில்தான் உலவும். சங்கராச் சாரியாரும் பண்டார சன்னதியும் பல்லக்கில் சென்ற காட்சியை அவர் கண்டதில்லை. அப்பல்லக்கைத் தூக்கிச் செல்பவரும் மனிதர்கள்தான் என்பது அவருக்குத் தெரியாது. மடத்துச் சொத்து கோயில் சொத்து என்ற பெயரால் ஆயிரக் கணக்கான வேலி நிலங்கள் முடங்கிக் கிடப்பதும், அந் நிலங்களில் ஆயிரமாயிரம் விவசாயத் தொழிலாளிகள் பாடுபட்டுழைத்தும் பலன் காணாதிருக்க, மதத் தலைவர்கள், மடாதிபதிகள் பட்டு பட்டாடையுடுத்தி, விலையுயர்ந்த அணிகள் பூண்டு, பாலும் பழமும் உண்டு பற்றாக்குறைக்கு மேனி ரங்கு ஏற தங்க பஸ்பம் சாப்பிடுவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போர்_முரசு.pdf/22&oldid=1706593" இலிருந்து மீள்விக்கப்பட்டது