உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:போர் முரசு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முரசு 29 சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் வெள்ளையனை எதிர்ப்பதில்,உப்பு சத்தியாக்ரஹத்தில், ஒத்துழையாமை இயக்கத்தில், ஆகஸ்ட் கிளர்ச்சியில் தன் கவனத்தை யெல்லாம் செலுத்தியதே தவிர, ஆட்சிக்குப் பின் தீர்க்க வேண்டிய பல உள்நாட்டுப் பிரச்னைகளைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் தவறிவிட்டது. அப்படி இன்றைய ஆளவந்தார்களும், முன்னால் போராட்டக்காரர் களுமான நம் காங்கிரஸ் அன்பர்களின் கண்ணில் படத் தவ றிய பிரச்னைகளில் ஒன்று சமுதாயப் பிரச்னை. அதன் விளைவுதான் இன்று ஹிந்து சட்ட தொகுப்பு மசோதா அரைவேக்காட்டுடன் இது அரசியல்வாதிகளுக்கு வேண்டும். அழுகிக்கொண்டிருப்பது; நல்லதொரு பாடமாக அமைய இந்தப் பாடத்தை நாங்கள் ஏற்கனவே உலகவரலாறு களின் மூலம் அறிந்திருப்பதால்தான், மக்களைத் தயார் செய்யும் வேலையில், சமூக சீர்த்திருத்த பிரசாரம் என்ற உன்னத பணியில், உயரிய பணியில் இறங்கியுள்ளோம். சமூதாய சமத்துவம் என்ற இலட்சியம் ஈடேறுவதற்கான சூழ்நிலை உருவாகும் வரை நாங்கள் இந்த பணியை விடமாட்டோம்! தொடர்ந்து செய்வோம். இதைப் பற்றி யெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை, எப்படியாவது, எங்கள் மாஜி எதிரி பிரசாசத்துடன் சேர்ந்தாவது அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்தான் எங்களுக்கு ஆசை என்று சொல்லு பவர்களுக்குக் கூறுகிறோம், “சற்றே விலகி நில்லும் பிள்ளாய்'’ என்று. இந்தப் போதனையை அவர்கள் நன்மையைக் கருதியே செய்கிறோம். அவ்வப்போது ஆதரவுக் கரத்தை நீட்டி உதவியளிக்கும் சகோதரக் கட்சியைக் கிண்டல் பேசி, வீணாக மக்களிடம் இருக்கும் செல்வாக்கையும் இழந்துவிட வேண்டாம் என்பதற்காக! மற்றொருபுறம், மீசையை முறுக்கிக் கொண்டு வருகிறார் நமது மாஜி நண்பர் சிவஞானம். மாஜி நண்பர் என நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போர்_முரசு.pdf/30&oldid=1706601" இலிருந்து மீள்விக்கப்பட்டது