உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:போர் முரசு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முரசு 43 செய்து பார்க்கக் கூடாது? மாகாணத்திலுள்ள இலட்சக் கணக்கான பிள்ளைகள் அத்தனைபேரையுமா பாழ்படுத்த வேண்டும்? நினைத்துவிட்டால் செய்துவிட வேண்டியது தானா? மறுபேச்சே கூடாதா? அப்படியானால் துக்ளக் ஆட்சிக்கும் ஜனநாயக ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? ஜனநாயக ஆட்சி என்று யார் சொன்னது என்றுகூட கேட்பார் ஆச்சாரியார். 'யார் என்னைத் தேர்ந் தெடுத்தார்கள்? யாருக்கு நான் பிரதிநிதி? எங்கே ஜனநாயகம்? அதெல்லாம் ஒன்றும் கிடையாது, என்னைக் கூப்பிட்டார்கள்; வந்தேன்; என் இஷ்டப்படி ஆள்கிறேன்'. என்று அவர் சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ் வளவு நெஞ்சழுத்தக்காரர் அவர்! இது மட்டுமா சொல்வார், எது வேண்டுமானாலும் துணிந்து சொல்வார், செய்வார், காங்கிரஸ் துதிபாடிகள் இருக்கும் வரை ! நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் நேர்மையுள்ள காங்கிரஸ்காரர்களே! இந்த கல்வித் திட்டம் நாட்டுக்கு நலன் பயக்குமா? நம் பிள்ளைகளை நாசமாக்கும் இந்த திட்டத்தை நாட்டில் பரப்ப விடுவது முறையா? இதனால் எங்கள் பிள்ளைகள் வாழ்வு மட்டுந்தானா பாதிக்கப்படும்? உங்கள் பிள்ளைகள் வாழ்வு பாழாகாதா? காங்கிரஸ் திராவிடனே! உங்கள் பிள்ளைகளை உத்தி யோகம் செய்யாதே எனத் துரத்துகிறார்-நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அரசாங்கத்தின் அலுவலகத்திலே உங்கள் சந்ததியை வரக் கூடாது என்கிறார்-இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா? ஏற்கனவே இருந்த வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையையும் பறிகொடுத் தோம்! இல்லை, பறித்து விட்டார்கள்! முன்னேற்பாட்டுடன். இதே நோக்கத்துடன் அரசியல் சட்டத்தில் வழி செய்து கொண்டுவிட்டு; அதையே ஆதாரமாக வைத்து வழக்காடி சதித்திட்டத்தை மிகச் கொண்டு விட்டார்கள். சாமர்த்தியமாக பூர்த்தி செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போர்_முரசு.pdf/44&oldid=1706615" இலிருந்து மீள்விக்கப்பட்டது