உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:போர் முரசு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கலைஞர் மு.கருணாநிதி ஆனால் இந்த டால்மியாபுரப் போராட்டத் திட்டம் இன்று திடீரென்று தீட்டப்பட்டதல்ல. ஏறக் ஏறக் குறைய ஓராண்டுகட்கு மேலாய் சிந்தித்து, சிந்தித்து பின் திட்டம் தட்டி, அதற்குப் பின் மாநாடுகள் பல கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்பியும் டில்லி நம் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் போராட்டத்தில் நேரடியாக இறங்கிவிட்டோம்! ஓராண்டு பொறுத்துப் பொறுத்துப் பார்த்தோம்! அச்சகத்தின் காரணமாக அல்ல! ஆள்வோருக்கு அவகாசம் கொடுத்துப் பார்த்த பின் டால்மியாபுரம் உள்ள மாவட்டத்திலேயே இருக்கும் லால்குடி என்னும் ஊரில், ஏறத்தாழ மாநில மாநாடு என்று மதிக்கத் தக்க அளவுக்கு மாபெரும் மாநாடு கூட்டி அந்த மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானப்படி போ ராட முன் வந்துள்ளோம். ஆக, திடீரென்றோ, விளம்பரத்திற்கென்றோ, துவக்கப் பட்டதல்ல இந்தப் போராட்டம். அப்படி யொன்றும் விளம்பரத்திற்கு ஆசைப்பட வேண்டிய நிலையிலுள்ளவர் களல்ல நாங்கள். அதிலும் சிலர் கருதுவதுபோல், கலாட்டா மூலம் பத்திரிகை விளம்பரத்தை விரும்புபவர்களல்ல நாங்கள். எந்த அரசியல் கட்சியையும்விட அமைதியைக் கடைப்பிடிப்பவர்கள் நாங்கள்தான். கலவரம் செய்யும் கயமைத்தனம் எங்களிடம் காணமுடியாது. அதோடு இந்நாட்டு தேசிய பத்திரிகைகளின் யோக்கியதை எங்களுக்குத் தெரியாததல்ல. உதாரணமாக நாளைக்கு, டால்மியாபுரத்தில், நானும் எனது தோழர்களும் அங்கு ரயில்வே ஸ்டேஷனில் உள்ள அந்த வடநாட்டான் பெயருக்குமேல் 'கல்லக்குடி' என்ற பெயர் பொறித்த காகிதத்தை ஒட்டிவிட்டு அமைதியாகத் திரும்பி வந்து விட்டால், என்ன வரும் பத்திரிகைகளில்? டால்மியாபுர போராட்டம் பிசுபிசுத்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போர்_முரசு.pdf/49&oldid=1706620" இலிருந்து மீள்விக்கப்பட்டது