உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:போர் முரசு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் "கல்லக்குடி- பழங்காநத்தம்' என்ற ஊரில் அமைந்த புகைவண்டி நிலையத்துக்கு வடநாட்டு ஆதிக்கச் சின்னமாக 'டால்மியாபுரம்” என்று பெயர் அமைந்ததை எதிர்த்து தி.மு.கழகம் 1953-ல் நடத்திய, கல்லக்குடி போராட்டத் திற்கு அறிஞர் அண்ணா அவர்கள் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைத் தலைவராக நியமித்தார்கள். அந்தத் தலைமைத் தளபதி களம் புகுந்து, முல்லை சக்தி, கஸ்தூரி ராஜ், குழந்தைவேலு, குமாரவேலு ஆகிய கழகக் காளையருடன் தனது 29 வது வயதில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து ரயிலை நிறுத்தி மாபெரும் அறப் போரை நடத்தினார். ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் பெற்றார். அந்தப் போராட்ட விளக்கக் கூட்டத்தில் அவர் கொட்டிய முரசே இந்த நூல்பல பதிப்புகள் வெளிவந்துள்ள இந்த வீர உரையை பாரதி பதிப்பகமும் வெளியிடுவதில் பெருமை அடைகிறது. பழ.சிதம்பரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போர்_முரசு.pdf/5&oldid=1706576" இலிருந்து மீள்விக்கப்பட்டது