பக்கம்:பௌத்த தருமம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிருவாணம் 137 _ - எஞ்சியுள்ள பகு தி யே. அந்தக் குறையையும் உலகிலே அநுபவித்து முடிப்பதற்காகப் பின்னும் வாழ்ந்திருக்க நேரலாம். அப்படி வாழ்தல், குயவன் திகிரியைச் சுற்றுவதை நிறுத்திய பிறகும் திகிரி சிறிது நேரம் முந்திய வேகத்தால் சுற்றிக் கொண் டிருப்பதைப் போன்றது. ஆல்ை நிருவானப் பேறு பெற்றவர்களுக்குப் பின்னல் பிறவியில்லை. அவர் களுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் உரிய தொடர்பு அறவே அறுந்து போகும். பிரபஞ்சத்தின் நியதிகள் எதுவும் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. விளக்கமுடியாத நிலை நிருவானத்தைப்பற்றி விவரமாக விவரித்துக் கூறப் புத்தர்பிரான் மறுத்துவிட்டார் அவருடைய மெய்யடியார்களும், அது வருணனைக்கு அடங்காத பெரும் பதம் என்பதாலும், வார்த்தைகளில் அதை வடித்துக்கொடுக்க முடியாது என்பதாலும், அதைப் பற்றிய கேள்விகளுக்கு நேரடியான மறுமொழி சொல்வதில்லை. ஒரு சமயம் தம்மதின்ன என்ற பிக்குனியிடம் விசாகன் என்பவன் நிருவாணம் என்பது என்ன என்று கேட்டான். அவள், (உத்தம வாழ்க்கை)-தருமத்தைக் கைக்கொண்ட வாழ்க்கைஎன்பது நிருவாணத்தில் தோய்ந்தது, அதன் குறிக்கோள் நிருவாணம், முடிவும் நிருவாணமே! என்ருள். விசாகன் பின்னல் புத்தரிடம் சென்று கேட் டான். அவர் தம்மிடம் முதலில் கேட்டிருந்தாலும், தம்மதின்ன கூறிய பதிலேயே தாமும் கூற நேர்ந் திருக்கும் என்று சொல்லிவிட்டார். புத்தர்பெருமான் பெற்ற மெய்ஞ்ஞானத்தைப் பற்றி விளக்கிக் கூற இயலாதென்றும், அது அட்சரங்கள், சொற்களுக்கு அடங்காதென்றும் பெளத்த நூல்கள் கூறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/144&oldid=848911" இலிருந்து மீள்விக்கப்பட்டது