பக்கம்:பௌத்த தருமம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்த சங்கம்

179



உண்மையான மதிப்புயர்ந்த இத்தத் துறவிகளுக்கு நானும் ஊழியம் செய்கிறேன்! அத்தகைய ஊழியம் பன்மடங்கு பயனளிக்கும்!

மகள் - அப்பா! விரைவாகச் சென்று புத்தர் பெருமானைச் சரணடைவாயாக! அவர் உபதேசங்களைக் கேட்டுத் தீமைகளை யெல்லாம் களைந்துவிடுவாயாக!

தந்தை - இதோ நேராகப் புத்தரிடம் சரணடையச் செல்கிறேன்! அவர் போதனைகளைப் பிக்குகளிடம் கேட்கிறேன்! நானும் தரும விதிகளைக் கடைப்பிடித்து, மண்ணுலகில் தலைசிறந்த இன்பத்தைப் பெறுகிறேன்!

(பின்னால்)

இதற்கு முன்னால் நான் பிறப்பினால் மட்டும் பிராமணனாயிருந்தேன், இன்று நான் உண்மைப் பிராமணனாக ஆகிவிட்டேன்!

சங்க விதிகள்

'திரிபிடகங்கள்' என்ற மூன்று பிரிவுகளான பௌத்தத் திருமுறைகளிலே சங்கத்திற்குரிய விதிகள் மட்டும் ஒரு தனிப் பிரிவாகும். அதுவே விநய பிடகம். பௌத்தர்களுக்கு அது மிக மிக முக்கியமானது. விநய பிடகத்தில் ஐந்து பெரு நூல்கள் அடங்கியிருக்கின்றன: அவை 'மகா விபங்கம்', 'பிக்குணி விபங்கம்', 'மகாவக்கம்', 'சுள்ள வக்கம்', 'பரிவாரம்' என்பவை. விநிய பிடகத்தில் பிக்குகளின் ஒழுக்க நியமங்களைத் தொகுத்துக் கூறும் பகுதி 'பாதி-மொக்கம் (பிராதி மோட்சம்)' என்பது. பிக்குகள் இதிலுள்ள விதிகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும். மாதத்திற்கு இருமுறை சங்கத்திலுள்ள பிக்குகள் ஒன்றாகக் கூடியிருக்கையில், பாதி-மொக் கத்தை எல்லோரும் ஓதுவதுண்டு. 'மகா விபங்கம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/186&oldid=1386875" இலிருந்து மீள்விக்கப்பட்டது