பக்கம்:பௌத்த தருமம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தத் திருமுறைகள்

213


 நாகசேனரையே குருநாதராகக் கொண்டு, பெளத்த மும்மணிகளைச் சரணமடைந்தான். பேரருள் வள்ளலான அசோகருக்குப் பின்னால் பெளத்த தருமத்தை வளர்த்துவந்த பெருமை இந்தக் கிரேக்க மன்னனைச் சேர்ந்தது. பிக்குகளுக்காக மிலிந்த-விகாரை ஒன்று அமைத்து, அதை அவன் தன் குருவுக்கு அர்ப்பனித்தான்; பிக்குகளின் சங்கத்திற்குப் பெருந் தொகைகளை அள்ளிக் கொடுத்து வந்தான். பிற காலத்தில் அவன், தன் மைந்தனிடம் இராஜ்யத்தை ஒப்படைத்து விட்டுத் துறவு பூண்டு, பிக்குவாக வாழ்ந்து, முடிவில் அருகத்து நிலையையும் அடைந்ததாக மிலிந்த பந்ஹா' கூறுகின்றது.

'விசுத்தி மார்க்கம்' (-பரிசுத்தமான வழி அல்லது பாதை) என்ற பாலிமொழி நூலை யாவரும் ஒருமுகமாகப் புகழ்ந்துள்ளனர். ஆதிப் பெளத்த இலக்கியத்தின் அமிசங்கள் ஒவ்வொன்றிலும் ஒருபகுதி அதிலே அடங்கியிருப்பதாகக் கூறுவதுண்டு. பெளத்தத் திருமுறைகளான திரி பிடகங்கள், அவற்றின் வியாக்கியானங்கள் ஆகியவற்றின் சாரம் இது என்று சொல்லலாம். புத்தர் போதித்த புராதன மார்க்கத்தின் சுருக்கத்தை அப்படியே மாறுபாடின்றி இதில் தெளிவாகக் காணலாம். இதை இயற்றியவர் பேராசிரியர் புத்தகோஷர். பேரறிவாளரான இவர் வட இந்தியப் பார்ப்பனர் என்பது மரபு. மகாபண்டிதராக விளங்கிய இவரை, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் புத்தகயையில் பெளத்த சங்கத் தலைவராக விளங்கிய மகாஸ்தவிரர் ரேவதா என்பவர் சங்கத்தில் சேர்த்துத் தரும, விநய நூல்களையெல்லாம் போதித்தார். புத்தகோஷர் இயற்றிய முதல் நூல் ‘ஞானோதயம்’. பின்னால் இவருடைய ஞானகுருவின் சொற்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/220&oldid=1386856" இலிருந்து மீள்விக்கப்பட்டது