பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●机。避。 ஞானசம்பந்தன் Δ 7 எங்கள் தந்தையாரும் இருந்தார் ! எம் மலையும் இருந்தது : இந்த மாதம் எம் மலையும் இல்லை : தந்தை யாரும் இலர் ' என்று கூறும் போது அவர்கள் மனத்தில் வெடித்துப் பொங்கி வரும் துயரத்தை நாமும் அனுபவிக் கிறோம் ! நான்காவது அடியில் காணப்படும் எள்ளல், வெறுப்பு ஆகிய சுவைகள் எவ்வளவு ! வெற்றி முரசினை யுடைய வேந்தர்கள்' என்று கூறும் சொற்களில், அட ! இவர்களும் மானத்தை விட்டு, வெற்றி முரசை வைத்துக் கொண்டுள்ளார்களே ?' என்று மூவேந்தரையும் எள்ளி வருந்துகிறார்கள். ஆழ்ந்த துயரத்திலுங்கூட இச்சுவை வெளிப்படத்தான் செய்கிறது. ஐந்தே அடிகளையுடைய இப்பாடலைப் பாடியதன் மூலம் பாரி மகளிர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் உதவி, தாமும் தம் தந்தையைப் போல அழியாப் புகழ் பெற்று விட்டனர். - 2. பாட்டியார் பெற்ற பரிசில் ஒளவை மூதாட்டியாரின் பெயரை இந்நாளில் அறியாத தமிழர் இரார். ஆனால், செய்திகள் பரவ முடியாத அந்தப் பழைய நாளிற்கூட அப்பெருமாட்டி யார் பெயர் தமிழ் நாடு முழுவதும் அறிந்த பெயராகவே இருந்து வந்தது. இப்பெயர் தாங்கிய பெருமாட்டியர் பலர் பல காலத்தில் இருந்திருக்கின்றனர். இங்கு நாம் குறிப்பது சங்க காலம் என்று வழங்கப்படும் காலத்தில் (இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்) வாழ்ந்தவரைப் பற்றியேயாகும். இவரது பெ ரு ைம காரணமாகப் பிற்காலத்தில் பலருக்கு ஒளவை என்றே பெயரிட்டனர் போலும் பெயர் வைத்துக்கொண்டவர் அனைவரும் ஒளவையாரைப் போலக் கற்றறிவுடையவரும் கவிஞரும் ஆகிவிட முடியுமா ? எனவே, பிற்காலத்தில் அப்பெயர்