பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 A மகளிர் வளர்த்த தமிழ் வேண்டும். இவ்விரண்டையும் செய்ய வல்ல து.ாதுவன் யார் என்று பலகாலும் ஆய்ந்த அதியமானுக்கு, நல்ல காலத்தின் அடையாளமாக ஒ ள ைவ ய ார் உடன் இருந்தார். அவனுக்காகத் தொண்டைமானிடம் தூது செல்லத் துணிந்தார் இப்பெருமாட்டியார். வள்ளுவர் குறளுக்கு முற்றிலும் இலக்கியமாய் அமையக்கூடிய பண்பாடுடை யவர் ஒளவையார். இவர் தொண்டைமானிடம் சென்றார். படை சேர்த்து வைத்துள்ள செருக்குடன் இருந்தான் தொண்டைமான் ; பாட்டியாரைக் கண்ட அடன் மிகுந்த உபசரிப்புச் செய்து, தன் படைக்கலச் சாலையை முழுவதும் சுற்றிக் காட்டினான். பாட்டியார் இதனைக் கண்டு அஞ்சி, அதியமானை மன்னிக்கும்படி வேண்டுவார் என்று கனவு கண்டான் தொண்டைமான். முழுவதையும் சுற்றிப்பார்த்து வந்த அதியன் தூதுவரான பாட்டியார் தம் கருத்தை ஒரு பாடலாகப் பாடி னார். அப்பாடலில் அவருடைய அன்பும், அறிவும், ஆராய்ந்த சொல் வன்மையும், தொகுத்துக் கூறும் அழகும், சிரிக்கப் பேசும் இயல்பும் நன்கு விளங்கு கின்றன. ‘ஐயனே, இங்கு உன் படைக்கலச் சாலையில் ஆயுதங் கள் அனைத்தும் பளபளப்புடன் மயிற்பீலி சூட்டப்பட்டு, மலர்மாலை அணியப்பட்டு, வலிய பிடிகள் போடப் பட்டுத் துருப் பிடியாமல் நெய் பூசப்பட்டு உள்ளன : மிகவும் பாதுகாவலான இடத்தில் உள்ளன. அதிய மானிடம் உள்ள படைக்கலங்கள் பகைவரைக் குத்தி நுனி உடைந்து அனைத்தும் சாணை பிடிக்கக் கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன. அதியன் யார் தெரியுமா ? தன்னிடம் இருப்பின் பலருக்குங் கொடுத்து உதவுபவன். இல்லையாயின், பலருடனும் சேர்ந்து உள்ளதைப் பகிர்ந்து ஆண்பவன்' என்ற கருத்தமையப் பாடினார் அதியன் தூதுவர்.