பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 79 தவறுகள் செய்யவும் நேரிடுகின்றது. அதியமான் சிறந்த வள்ளல்களுள் ஒருவன்தான் எனினும், அவனும் மனிதன் தானே ? இதனால் ஒரு முறை பெரிய தவறு ஒன்றைச் செய்து விட்டான். ஏனையோர் தவறு செய்தால் தீய பயன் விளையும். ஆனால், அதியமான் செய்த தவற்றால், சிறந்த கவிதை ஒன்று பிறந்தது : ஒரு முறை ஒளவையார் அதியம்ானைப் பார்க்கப் புறப்பட்டுச் சென்றார். ஒர் அரசனைப் பார்க்கப் போவ தென்றால், அவனுடைய சமயம் அறிந்து செல்ல வேண் டாவா ? வாயிற்காவலன் வரை பாட்டியார் சென்று விட்டார். ஆனால், அவன் தடுத்து நிறுத்தி விட்டான். பாட்டியாரை இதுவரை எந்த அரசனுடைய அவைக் களத்திலும் தடுத்து நிறுத்தியவர் இல்லை. ஆனால், அவர் மிகுதியும் பழகுகின்ற அதியமானுடைய வீட்டில் அவன் இருக்கும் காலத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டால், இது பெரிய வியப்பன்றோ ஒரு வேளை வாயிற்காவலன் புதியவனாக இருக்கலாம் ; தம்ம்ை அறியாமல் தடுத்து நிறுத்திவிட்டான் எ ன் று கருதினார் பாட்டியார். அரசனிடம் தம் வருகையை அறிவிக்குமாறு கூறினார். வாயிற்காவலன் உள்ளே சென்று அறிவித்துங்கூட, அதியன் அ வ ைர அழைக்கவில்லை. அன்றெல்லாம் பாட்டியார் அதியனைக் காணாமலே இருந்து விட்டார். அரசியல் அலுவல்களில் அவன் ஈடுபட்டிருக்கலாம் ; அதனாலேயே தடை ஏற்பட்டது என்று கருதி இருந்து விட்டார். - - ஆனால், நாட்கள் ஒன்று, இரண்டு என உருண்டோடி விட்டன. இன்னமும் அதியன் அவரை அழைக்கவில்லை. ஆனால், அரசியல் காரியங்கள் அனைத்தும் நடைபெறத் தான் செய்தன. பாட்டியார் பொறுமையை இழந்து விட்டார். என்ன நினைத்து விட்டான் அதியன் தம்மைப் பற்றி ? பரிசில் வாங்க வருதலினால் தம் மதிப்பைக் குறைத்துக் கருதி விட்டானா ? பரிசில் வாங்கவா அவர்