பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 87 'யானைதன் கோட்டிடை வைத்த கவளம்போலத் கையகத் தது.அது பொய்யா காதே !’ (புறம். 101) என்று கூறும்பொழுது ஒர் உண்மை புலப்படும் : பரிசில் அவன் விரும்பித் தருவது என்பதை மறுத்து, தன் விருப்பம் போல அவன் தருகிறான் என்ற உண்மையைக் கூறுகிறார் பாட்டி. மற்றொரு பெண் புலவராகிய மாறோக்கத்து நப்ப சலையார் பயன்படுத்தும் சிறந்த உவமையைக் காண் போம் : மலையமான் சோழிய ஏனாதி திருக்கிள்ளி என் பவன் ஒரு சிற்றரசன்தான். சோழ, பாண்டியர் போன்ற பெருவேந்தரும் போர்க் காலத்தில் அவனுடைய துணை யைப் பெரிதும் விரும்பி நிற்கும் திறம் பெற்றவன் அவன். அவனுடைய தந்தையும் இவ்வாறே வாழ்ந்தான். ஒரு முறை சோழனுக்கும் ம ற் .ெ றா ரு மன்னனுக்கும் (பாண்டியன் ?) போர் நடைபெற்று, அதில் சோழன் தோல்வியுற்று வி ட் ட ா ன். தோற்ற சோழன் மலையமானது முள்ளுர் மலையில் சென்று ஒளிந்து கொண்டான். தம் மன்னனைக் காணாமல் சோணாட் டார் மிகவும் வருந்தினர். முன்னொரு காலத்தில் தேவாசுரப் போரில் இத்தகைய நிலை தோன்றியதாம். இரவாகவே இருந்து விடின் தாம் நன்கு போரிடலாம் எனக் கருதிய அசுரர், கதிரவனைக் கடலினுள் ஒளிய வைத்தனராம். இதை அறிந்த கண்ணபிரான் சென்று, ஞாயிற்றைப் பிடித்து வந்து ஆகாயத்தில் வைத்தானாம். அதேபோல, ஒளிந்துள்ள சோழனுக்காக மலையமான் படை கொண்டு சென்று வென்று சோழனை அரியணையில் ஏற்றினானாம். இந்த உவமையை நப்பசலையார் நன்கு பயன்படுத்துகிறார் : 'அணங்குடை அவுனர் கணங்கொண்டு ஒளித்தெனச் சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது இருள்கண் கெடுத்த பகுதி ஞாலத்து