பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 89 வனாயும் இருந்தான் போலும் ! அவன் சிறந்த கலைஞ ராகிய ஒரு பெண்பாற் புலவரின் மனத்தைக் கவர்ந்து விட்டான். இயற்கையில் சாதாரணமாக நடைபெறும் ஒரு செயல் தான் இது என்றாலும், பெண்டிர் அனைவரும் எல்லா ஆடவாரலும் கவரப்படுவதில்லை. அவரவர்க்கு என்று தனிப்பட்ட சில விருப்பங்கள் இருத்தல் கூடும். அந்த விருப்பத்திற்கு ஏற்ற ஆண்மகன் கிடைக்கும் பொழுது தான், அந்தப் பெண்டிர் தம் மனத்தைப் பறிகொடுப்பர். உதாரணமாக, ஒவியத்தில் வல்ல ஒருத்தி அதே கலையில் வல்ல ஆண் மகனிடத்தில் மனத்தைப் பறிகொடுத்தல் இயல்பு. வேறு எந்தத் துறையில் அவன் வல்லவனாயினும், அதுபற்றிக் கவலையில்லை. ஒவியந் தவிரப் பிற துறை களிலும் அவன் வல்லுநனாய் இருப்பின், அது மேலும் வரவேற்கப்படும் என்றாலும், அவள் மனத்தைக் கவர முதற்காரணமாய் அமைவது ஒவியமேயாகும். நக்கண்ணையார் என்பவர் இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்னர் வாழ்ந்தவர் ஆவர். சிறந்த கல்வி அறிவும், கவிதை இயற்றும் திறனும் இளமையிலேயே வாய்க்கப் பெற்ற பெருங் கவிஞர் அவர். நக்கண்ணையார் இளம்பருவம் உடையவராய் இருந்த காலம் அது. எங்கோ ஒரு மூலையில் அமைந்திருந்த அவருடைய சிறிய ஊரில் அன்று ஒரு பெரிய அமர்க்களம். விடியும் பொழுதிலிருந்தே ஊர் மக்கள் அனைவரும், ஊரின் பொதுவிடமாகிய 'ம ந் ைத" என்று தற்காலத்தில் வழங்கப்பெறும் 'மன்று’க்குச் சென்று கூடிக்கொண்டிருந்தனர். ஆண்களும் பெண்களும் நீண்ட தூரத்திலிருந்தும் அண்மையிலிருந்தும் மன்றில் வந்து நிரம்பிவிட்டனர். நக்கண்ணையார் மிகவும் அதிர்ஷ்டமுடையவர் என்றே கூற வேண்டும். இன்றேல், அவருடைய வீடு மன்றை அடுத்து இவ்வளவு மேடான நிலத்தில் அமைந்திருக்குமா ? ஏனையோர் அனைவரும் மன்றில் சென்று இடித்துப் புடைத்துக்கொண்டு வேடிக்கை