பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 "ரகஸ்ய சம்பாஷனைகளை வெளியிடுவது சாதாரணமாக தர்மத்துக்கும், ஒழுக்கத்துக்கும் அடுத்ததன்று. ஆளுல் அசாதாரண சந்தர்ப்பங்களை உத்தேசித்து அசாதாரண காரியங்களைச் செய்ய நேரிடுகிறது. சுமார் ஒன்றரை வருஷத்துக்கு முன் மயிலாப்பூரில் உமது வீட்டில் ஒர் ஸ்வதந்திர பக்தருடன் நீர் சம்பாஷணை செய்து கொன் டிருந்த காலத்தில் மிக உருக்கத்துடன் உம்மைப்போலவே நாங்களும் ஸ்வதந்திரதாகம் கொண்டவர்களாகத்தான் இருக்கிருேம். உமக்கு இந்த நாட்டிலுள்ள பக்தி எங்களுக்குமுண்டு. நமது உபாயங்கள் வேறு, லட்சியம் ஒன்றுதான்' என்றீரே நினைவிருக்கிறதா? "அந்த சுதந்திரதாகம்தான் உம்மை இப்போது ஹைகோரிட்ஜட்ஜ் வேலை ஒப்புக்கொள்ளத் தூண்டியதோ? நாளைக்கு அதே மனிதர் சென்னப் பட்டணத்தில் சுதந்திர போதனை செய்யும் பrத்தில் போலீசார் அவரைப்பிடித்து உம்முன்னே நிறுத்துவார்களே! நீர் தயையையும் நீதியை யும் கலந்து எட்டு வருஷ கடுங்காவல் விதிப்பீரே! "நம்மிருவரின் லட்சியம் ஒன்றுதான் சந்தேகமா? ச்ேசி! வி. கிருஷ்ணஸ்வாமி அய்யரே! என்ன வார்த்தை காணும் சொல்லிவிட்டீர்! நம்மிருதரத்தாரின் லட்சியம் ஒன்றுதான்! 'இப்போது அந்த வார்த்தை சொல்லுவீரா? ஐயோ! வி. கிருஷ்ணஸ்வாமி அய்யரே என்ன ஜன்மம் எடுத்து விட்டீt!' (விஜயா - 1909 அக்டோபர் 5) பாரதியார் எழுதிய இந்தத் தலையங்கம் எத்தகைய உயர்ந்த லட்சிய நோக்குடையதாக இருக்கிறது! அவர து 11