பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பாராட்ட வேண்டுமாயின் இந்தப் பாடலின் அரசியல் பின்னணியை அறிதல் வேண்டும். வெள்ளையர்கள் இந்தியாவை எப்படி அடிமை கொண் டிருந்தார்களோ அதேமாதிரி ஆசியாவில்-குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியாவில்-மேலும் பல நாடுகளை அடிமை கொண்டிருந்தார்கள். இந்த நாடுகளில் சென்று வெள்ளையர் தோட்டம் போட்டனர். காப்பித் தோட்டம், ரப்பர் தோட்டம், தேயிலைத் தோட்டம், கரும்புத் தோட்டம். இம்மாதிரி தோட்டங்களைப் பெரும் அளவில் வைத்தனர். இத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆள் வேண்டுமே! ஆட்கள் வேண்டும். அவர்களுக்குக் கூலியும் குறைவாகக் கொடுக்க வேண்டும். அவர்கள் முதுகில் ஏறிச் சவாரி செய்து வேலையும் வாங்க வேண்டும். இது தான் அந்த வெள்ளை முதலாளிகளின் நோக்கம். இந்த நோக்கத்துடன் பெரும் அளவில் ஆள் பிடிக்க முயன்ருர்கள். இங்கே ! இந்தியாவில்தான் பசியும் பட்டினியும் தலைவிரித்தாடினவே! மக்கள் பஞ்சத்தால் வாடினரே பிழைக்க வழியின்றித் தவித்தனரேi இந்த நாட்டு மக்களைக் கொண்டுபோய் தங்கள் சுரண்டல் வேட்டையை நடத்திக் கொள்ள விரும்பினர் கள் அந்த வெள்ளை முதலாளிகள்-தோட்டம் போட்ட முதலாளிகள். அவர்களுக்கு உதவியது இந்தியாவை ஆண்டி பிரிட்டிஷ் அரசாங்கம். ஆயிர்க் கணக்கில் மக்களைத் திரட்டி அனுப்பினர்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கடல் கடந்து சென்ருர்கள்: வயிற்றுப் பிழைப்புக்காகத் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக அமர்ந்தார்கள்: காப்பித் தோட்டங்களில்