பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛D டவர் பலருள் ஒர் இளம் பெண்ணும் இருந்தார். அப்பெண் மணியின் பெயர் மார்க்கரெட் நோபிள் என்பது. இவர் ஓர் ஐரிஷ் பெண்மணி. அயர்லாந்து தேசம் பிரிட்டனின் விலாப் பக்கம் உள்ள நாடு. இந்த அயர்லாந்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தி ஆண்டு வந்தது பிரிட்டன். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வந்தது அயர்லாந்து. எனவே அங்கு எல்லாருடைய ரத்தத்திலேயும் சுதந்திர வேகம் ஒடிக் கொண்டிருந்தது. அந்த நாட்டிலே பிறந்த இளம் பெண் எப்படியிருப்பாள்? மாரிக்கரெட் நோபிள் சுவாமி விவேகானந்தரின் ஆவேசச் சொற்பொழிவிலே பெரிதும் ஈடுபட்டார். அவரைப் பின் தொடர்ந்தார்; இந்திய நாட்டுக்கு வந்தார். நிவேதிதை என்று அவருக்குப் பெயர் குட்டினர் சுவாமி விவேகானந்தர். கல்கத்தா அருகே இருந்து கொண்டு இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு வந்தார் நிவேதிதை. இவரை தரிசித்தார் பாரதியார்: இவரிடம் உபதேசம் பெற்ருர்; உணர்ச்சி பெற்ருர்; பின்வருமாறு பாடினர். அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் கெஞ்சில் இருளுக்கு ஞாயிருய் எமதுயர் கா டாம் பயிர்க்கு மழையாய் இங்கு பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும்பொருளாய்ப் புன்பைத்தாதச் சுருளுக்கு கெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன். கல்கத்தா காங்கிரசின்போது பூரி வியின சந்திர பாலருடன் நெருங்கிப் பேசினர் பாரதியார்: சென்னைக்கு