பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னாகும். குழந்தைகளை நாம் எப்படி ஸ்ம்ரக்ஷனை செய்ய முடியும்? ஆதலால் குழந்தைகளுடைய ஸ்ம்ரக்ஷ னையே நாடி ஏகபத்தினி விரதம் சரியான அனுஷ்டானம் என்று முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தேசியக் கல்வியென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் பாஷையை பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலிஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உபாஷையாகவும் ஏற்படுத்தினால் அது தேசியம் என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியும் என்பதில் ஐயமில்லை தேசபாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை இதை மறந்து விடக்கூடாது.

தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ்நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர் பார்க்க வேண்டுமானால் இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷை யே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத்தம் பட்டம் அறை விக்க வேண்டும். இங்ஙனம் தமிழ் பிரதானம் என்று நாம் சொல்லுவதால், டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடம் கrயார் என்ற போலிப் பெயர் புனைந்த தேசவிரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷை விரோதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேசம் முழுதிலும் எப்போதும் போலவே வட மொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூரணமாகச் செயயுமாறு நாடு முழுவதிலும் வட மொழிப் பயிற்சி மேன் ம்ேலும் ஒங்குக. எனினும் தமிழ்நாட்டில் தமிழ் மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக’ என்று மகாகவி மிகவும் தெளிவாக தமிழ் மொழி முதன்மை பெறவேண்டும் என்பதையும் தாய் மொழிக் கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறுகிறார்.

இன்னும் தேசியக்கல்வி என்னும் தலைப்பில் மகாகவி ஆரம்பப் பள்ளிக் கூடங்கள் அதன் பாடத்திட்டங்கள், எழுத்து, படிதப்பு, கணக்கு, சரித்திரப் பாடங்கள், பூமி சாஸ்திரம், மதப்படிப்பு, ராஜ்ய சாஸ்திரம், (அரசியல்) பொருள்நூல் லயன்ஸ் அல்லது பெளதீக சாஸ்திரம் கைத் தொழில் விவசாயம் தோட்டப் பயிற்சி, வியாபாரம் சரீரப் பயிற்சி யாத்திரை முதலியவைகளைப் பாடத் திட்டங்களில் சேர்த்து சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறார். --

தேசியக் கல்வியில் முகமதியார்களையும் இணைக்க வேண்டும்.

கல்வியில் மத பேதங்களைக் காட்டக்கூடாது.

மேலும் இந்தியாவில் உள்ள முஸ்ல்மான்களில் பலர் ஹிந்து சந்ததி யார் அவர்களுடைய நெஞ்சில் ஹிந்து ரத்தம் புடைக்கிறது. இங்ஙனமில்லாமல் வெறும் பட்டாணிய அராபிய, பாரnக, மொகலாய ஸ்ந்ததியாக இருப்போரும் இந்த தேசத்தில் ஆயிர வருஷங்களுக்கு மேலாக வாழ்வதால்

130