பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முயன்று மற்றது பலவித வேலைகள் செய்து பலமடைந்து இந்தக் கூட்டத்தை அழிக்கும். இது மறுபடி தலைதுாக்கி அதை அடக்கும் இங்கனம் தலைமுறை தலைமுறையாக இவ்விரண்டும் கூட்டங்களும் ஒன்றுக் கொன்று தீமை செய்து கொண்டேவரும். இதற்கு ஒய்வே கிடையாது. தர்மத்தாலும் கருணை யாலும் எய்தப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்க வல்லதாகும். இதனை அறியாதார உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும் அறியாதார் ஆவர்.

மேலும் ருஷ்யாவிலும் கூட இப்போது ஏற்பட்டிருக்கும் ‘சோஷலிஸ்ட்” ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடைய தென்று கருத வழியில்லை. சமீபத்தில் நடந்த மஹா யுத்தத்தில் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுத பலமும் ஒரே யடையாய்க் குறைந்து போய் மஹா பலஹீனமுள்ள நிலையில் நிற்பதை ஒட்டி, மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும். ‘கூட்டு வாழ்க்கைக் குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சும் சக்தி யேறிய மாத்திரத்திலே ருஷ்யாவின்மீது பாய்வார்கள் அங்கு உடமையிழந்த முதலாளிகளும் நில ஸ்வான்களும் இந்த அரசு களுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டாகும். லெனின் வழி சரியான வழியில்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோமாதலால் இந்தியாவின் சாத்தியா ஸ்ாத்தியங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோர்ல்லர். இவர்களுடைய உடமைகளைப்பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நமது தேசத்து ஏழைகள் அதிகமாக விரும்பவும் மாட்டார்கள். எனவே கொள்ளைகளும் கொலைகளும் சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிப்பிடித்து அனுஷ்டிக்க முயல வேண்டும். செல்வர்களுடைய உடைமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ளமுயலுதல் இந்நாட்டில் நாள்மேற்கூறியடி பொருந்தாவும் செய்யாது சாத்தியமும் இல்லை.

ஆனால், கோடிக்கணக்கான ஜனங்கள் வயிறு நிறைய உணவுகிடைக்கும் என்ற நிச்சயமில்லாமலும் லட்சக்கணக்கான ஒரு வேளைக் கஞ்சி கிடைக்காமலே சுத்தப்பட்டினியால் கோரமரணமெய்தும் படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலைமையை நாம் ஒரு கூடிணம் கூடச் சகித்திருப்பது நியாயமில்லை என்பது சொல்லாமலே போதரும்.

எனவே, உலகத்துன்பங்கள் அனைத்திலும் கொடிதான இந்த

==

207