பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் குடியிருப்புகளும் பூர்வீகக் குடிகளின் கூட்டமும் அதிகமாக இருந்த தென் ஆப்பிரிக்கப்பகுதிகளில் பூர்வீகமக்களைக் கொன்று குவித்து இன அழிப்பு செய்தும் அந்த நாடுகளிலும் ஆங்கிலேயர் குடியேறினார்கள். ஆயினும் அங்கு ஆங்கிலேயர்களும் இதர ஐரோப்பியரும் சிறுபான்மையராகவே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டார்கள்.

ஆஸ்திரேலியா, நியூசில்ாந்து நாடுகளில் ஆங்கிலேயர்கள் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு குடியேறினார்கள் கனடாவில் ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரர்களும் குடியேறினார்கள். வட அமெரிக்காவில் ஆங்கிலேயர்கள் பெரும்பகுதியும் இதர ஐரோப்பியரும் குடியேறினார்கள். பல்வேறு துறைகளின் கடின வேலைகள் உடலுழைப்பு வேலைகளுக்காக ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மக்களை அடிமைப் படுத்தி விலங்கிட்டு வட அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்ட கட்டாய வேலை வாங்கப்பட்டார்கள். -

தென் அமெரிக்க ஆநடுகளில் முதலில் குடியேறியவர்கள் ஸ்பானிஷ் காரர்களும் போர்த்துக்கீசியர்களுமாகும். அத்துடன் இதர ஐரோப்பியர்களும் குடியேறினார்கள். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் ஆப்பிரிக்கர்கள். இந்தியர்கள் மற்றும் இதர ஆசிய மக்களும் குடியேறினார்கள். தென் அமெரிக்க நாடுகளுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் என்று ஒரு பெயரும் உண்டு. இந்த நாடுகளில் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியும் போர்த்துக் கீசிய மொழியும் பேசுகிறார்கள். இந்த நாடுகளின் பூர்வீக மக்கள் எண்ணிக்கை குறைந்து குடியேறிய மக்களுடன் பெரும்பாலும் கலந்து விட்டார்கள். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்கமக்கள் பின்னர் அடிமை நிலை நீக்கப்பட்டு சிறுபான்மை மக்களாக நீடித்து வட அமெரிக்காவிலேயே அமெரிக்க பிரஜைகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியாவிலும் இதர ஆசிய நாடுகளிலும் அராபிய நாடுகளிலும் வட ஆப்பிரிக்களிலும் ஏற்கனவே ஸ்திரமானவளர்ச்சி பெற்ற உள்நாட்டு மக்கள் நிரம்பியிருந்தால் அவர்களை அழித்துவிட்டு ஐரோப்பியர்கள் குடியேற முடியவில்லை. இந்தியா போன்ற பழைய நாகரிகம் மிக்க நாடுகளின் கலாச்சாரம் ஆங்கிலேய கலாச்சாரத்தையும் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் வென்று விடுதலை பெற்று விட்டது.

ஐரோப்பிய நாடுகளில் நிலப்பரபுத்வ மன்னர், மதம் மடம் ஆகியவற்றின் கூட்டாட்சிக்கு எதிராகக் கலவரங்கள் நடந்து நவீன எந்திரத் தொழில் முதலாளிகளின் ஆட்சி ஏற்பட்ட போது, பல்லாயிரக்கணக்கான பலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி பசி பட்டினியால் தவித்த போது அவர்கள் தங்களுக்கு வாழ்வளிக்க வேலை கோரி பெரும் கிளர்ச்சியும் போராட்ங்களும் நடத்தினார்கள். அவர்களின் உரிமைகள் சிலவற்றை, காலனி நாடுகளிலிருந்து கிடைத்த கொள்ளை மூலம் நிறை வேற்றினார்கள்.

212