பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடுகளின் கூட்டமைப்பு அமைத்துப் பணியாற்ற வேண்டும். என்று அந்த கூட்டறிக்கைகளில் கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன.

எண்பது நாடுகளின் கம்யூனிஸ்டு மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மகாநாடும் அவர்களின் கூட்டறிக்கையும், சோஷலிஸ் நாடுகளின் கூட்டறிக்கையும் சந்தைவவிஸ்தரிப்பும் ஆங்கிலோ அமெரிக்கநாடுகளிடம் பெரிய அச்சத்தை உண்டாக்கியது. அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் உறுதிப்படுத்திக்கொள்ளவும் கடும் முயற்சிகள் மேற்கொண்டது.

அமெரிக்கா தனது ஆயுத தளவாட உறுப்த்தியையும் அணு ஆயுத உறபத்தியையும் அணு ஆயுத சோதனைகளையும் அதிகப் படுத்தியது. அமெரிக்க படைகள் வியத்நாம் மீது தாக்குதல்களை அதிகரித்தது. 1956-ஆம் ஆண்டு அமெரிக்க மண்டலத்தில் உள்ள கியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்டதால் அமெரிக்காவின் கோபமும் எரிச்சலும் அதிகரித்தது.

வியத்நாமில் அமெரிக்கா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. கியூபாவைச் சுற்றிலும் தனது ஆயுதக் கப்பல்களை நிறுத்தியது. சோவியத் யூனியனும் தனது ராணுவக்கப்பல்களை அட்லாண்டிக் கடலில் கொண்டு போய் நிறுத்தியது. இவ்வாறு போர் அச்சுறுத்தல்களும் நடந்து கொண்டிருந்தது. உலகில் பதட்டம் அதிகரித்தது. i

இதற்கிடையில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையும் வேறு சிலகம்யூனிஸ்ட்கட்சிகளின் தலைமைகளும் 1960-ஆம் ஆண்டில் 81 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சியின் கூட்டறிக்கையில் வெளியிடப்பட்ட கருத்துக் களின் மீது மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார்கள். அதனால் உலகக்கம் யூனிஸ்ட் இயக்கத்தில் வேறுபடாகளும் மாற்றுக் கருத்துக்களும் வெளிப்படையாகவே தோன்றி வெளிபடலாற்று இந்தக்கருத்து வேற்றுமைகள் உலகக் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தை பெரிய அளவில் பாதித்தது அந்த உலகப் பேரியக்கத்தை இரு கூறாக்கியது.

இந்தக் கருத்துவேறுபாடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பெரிய அளவில் பாதித்தது இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியும் உடைந்து இருபிரவாகியது. 1964-ஆம் ஆண்டில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாயிற்று கம்யூனிஸ்ட் இயக்கம் பலமாக இருந்த மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் பெரும்பாலான கம்யூனிஸ்டுகளும் பெரிய தலைவர்களும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் பிரிவில் சேர்ந்து விட்டனர். இருபிரிவுகளும் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களையும் அவதூறுகளையும் வசவுகளையும் கூட அள்ளி வீசிக் கொண்டனர். இந்த சண்டை கம்யூனிஸ்ட் இயக்கத்தை அதன் கவுரவத்தை செல்வாக்கை நாணயத்தையும் நம்பிக்கையையும் பெரும்

227