பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலத்து சங்கீதம்

பாரத தேசத்து சங்கீதம் பூமியிலுள்ள எல்லாத் தேசத்து சங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப் போலவே சங்கீதத்திலும் நவரசங்களின் தொழில் இருக்க வேணடும் நவரசங்களைப் பற்றி இந்தப் பத்திரிகையிலே தனியாக ஒரு வியாசம் பின்னர் எழுதப்படும். இன்ன இன்ன ராகங்களிலே இன்ன இன்ன சமங் ய்களில் இன்ன ரஸங்கள் தோன்றப்பட வேண்வுமென்ற விதிகள் எல்லாம் பூர்வகாலத்து நூல்களிலே காணப்படுகின்றன. கீர்த்தனத்திலுள்ள சொற்களின் அர்த்தமும் ராகத்தின் ஒலியும் ரஸ்த்திலே ஒன்றுப்பட்டிருக்க வேண்டும். தியாகையர் காலம் வரை நமது தேசத்து சங்கீதம் ஒளியுடனிருந்தது. பிறகு இதிலும் இருள் சேரத் தொடங்கி விட்டது. பாட்டிலே ரஸ்ச் சேர்க்கை கிடையாது. அப்படியே சேர்த்தாலும் ‘சோக ரஸம்” (கருணா ரஸம்) தான் சேர்ப்பார்கள் மற்றவை மடிந்து போயின. பாட்டுக்கிசைந்தபடி தானம் என்பது மாறிப் போய் தானத்துக் கிடைந்தபடி பாட்டாகி விட்டது. ‘இன்பத்தை காட்டிலும் கணக்கே பிரதானம்’ என்று முடிவு செய்து கொண்டார்கள். இன்பமும் கணக்கும் சேர்ந்திருக்க வேண்டும். இன்பம் இல்லாமல் கணக்கு மாத்திரம் இருந்தால் அது பாட்டாகாது.

மறு பிறப்பு

இடைக்காலத்தே நமக்குச் சேர்ந்த கேட்டிற்கு சங்கீதத்தையும் கவிதையையும் திருஷ்டாந்தம் காட்டினோம். ஆனால் இந்தக் கேடு அவை இரண்டையும் மாத்திரபுே தொட்டு நிற்கவில்லை. நமது சித்திரத் தொழில், நமது சிற்பம், நமது ஜனக்கட்டு, ஜன நீதி, நமது சாஸ்திரம், தலை, கால் எல்லாவற்றிலும் இந்தக் கேடு பாய்ந்து விட்டது. நோய் முறு றிப் போயிருந்தது. பராசக்தி நல்ல வேளையில் நமக்குள் உயர்ந்த வைத்தியர் பலரை அனுப்பினாள். அவளுக்கு நம்மீது கிருபை வந்து விட்டது. எனவே பிழைத்தோம். ஆனாலும் ‘இம்முறை பிழைத்தது புனர்ஜன்மம்’.

இந்த புனர்ஜன்மத்தின் குறிகளை எல்லாவற்றிலம் காண்கிறோம். பாரத ஜாதி புதிதாய் விட்டது. தற்காலத்திலே பூமண்டலத்து மகாகவிகளில் நமது ரவீந்திரநாதர் ஒருவர் என்று உலகம் ஒப்புக் கொள்கிறது. இதுவரை ஐரோப்பிய பண்டிதர்கள் இயற்கை நூல் (ப்ரகிருதி சாஸ்திரம்) தமது விசேஷ உடைமை என்று கருதி வந்தார்கள். இப்போது நமது ஜெகதீச சந்திரவஸ்”. இந்த வழியில் நிகரற்ற திறமை பெற்றவர் என்பதை மேல் நாட்டு வித்வான்களில் ஒப்புக் கொள்ளாதவர் யாருமில்லை. தமிழ் நாட்டிலே புதிய கவிதையும் சாஸ்திர ஒளியும் விரைவிலே தோன்றும் உலகம் பார்த்து வியப்படையும். *

செத்துப் பிழைத்தோம். ஆனால் உறுதியாக நல்ல உயிரம் போல பிழைத்து விட்டோம். புதிய ஜன்மம் நமக்கு மிகவும் அழகான ஜன்மமாக்கும்படி

60