பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 63 நம்பிக்கைக்காகவும் இன்றும் அவர் உலக மக்க ளால் நினைவு கூறப்படுகிறார். அமெரிக்க நாட்டிலுள்ள பாஸ்டன் நகரில் 1917-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதியன்று கென்னடி பிறந்தார். தந்தையின் பெயர் ஜோசப் கென்னடி. பெரிய செல்வந்தர் தாயாரின் பெயர் ரோஸ் ஃபிட் ஜெரால்டு. கென்னடி பிறந்த சில நாட்களிலேயே அவர் களது குடும்பம் பாஸ்டனை விட்டு நியூயார்க் நகருக்கு வந்து விட்டது. பள்ளிப் பருவம் வந்ததும் பெற்றோர் தங்கள் அருமை மகனைப் பள்ளியில் சேர்த்தனர்.கென்னடி படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராகத் திகழ்ந் தார். அதே போன்று விளையாட்டுத் துறைகளி லும் சிறந்து விளங்கி, பள்ளி நாட்களிலேயே பல பரிசுகளைப் பெற்றார். எல்லா விளையாட்டுக்களையும் விட நீச்சல் போட்டி என்றால் கென்னடிக்கு மிகவும் பிடிக்கும். இதில் கென்னடி நிகரற்று விளங்கினார். தண்ணி ரோடு விளையாடுவதில் அவருக்கு அப்படி ஒரு ஆசை. கென்னடி தனது பதினெட்டாவது வயதில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் "ஹார் வெர்டு" பல்கலைக் கமகக்கில் சேர்க்க படிக்கார்,