உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கட் செல்வம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேண்டாவா?

131


துணிக்கு ஏற்ப-சட்டைக்கு ஏற்ப-உடலைக் குறைக்கும் கொடுமைக்கு உள்ளாக வேண்டியுள்ளது.

அருமைச் செல்வி !

நம் சென்னை நகரில் கருச்சிதைக்கும் 'திருமடங்கள்' பல இருக்கின்றன. ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனியாகப் பல இடங்கள் இருப்பதை அவற்றின்முன் தொங்கவிடப்பட்டிருக்கும் பலகைகளால் காணமுடிகின்றது. அவற்றைக் காணுந்தோறும் என் உள்ளம் மிகமிக வருந்தும். 'தம் பொருள் என்ப தம் 'மக்கள்' என்ற பாட்டிசைத்த வள்ளுவர் பிறந்த நாட்டிலா இத்தகைய விளம்பரங்கள் என எண்ணி எண்ணிப் பெருமூச்சு விடுவேன். என் செய்வது? இதுதான் நாகரிகம் எனக்கருதும் பொல்லாத அநாகரிகக் காலத்தில் நாம் வாழநேர்ந்ததே என்று வருத்தப்படுவதன்றி வேறு என்ன செய்யமுடியும்?

குழந்தை பிறக்கவில்லையே என்று கோடானுகோடி தவம் செய்தும், காசி, இராமேச்சுவரம் என்று யாத்திரை செய்தும், அரசமரத்தடியில் நாகம் நிறுவிச் சுற்றி வழி பட்டும் பலமுறையில் வேண்டி வேண்டி நின்ற நாட்டிலே தான் இன்று இந்த வேண்டாத நிலை உண்டாகி இருக்கிறது. இவற்றுள் சில அறியாதவர்களும் சிக்கித் தடு மாறுவதை நான் அறிவேன். மக்கள் தேவை இல்லை என இதனால். நிலைகெட்டு, பின் பெற்ற மக்களையும் பறி கொடுத்து வேறு மக்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியவில்லையே என ஏங்கும் தம்பதிகளை நான் நன்கு அறிவேன். எல்லாத் துறைகளிலும் செயற்கைச் சேற்றில் பட்டு உழலும் மனித சமுதாயம் இந்தத்துறையிலும் அச் சேற்றையே நாடிச் சென்றுவிட்டது.

செல்வி !

எங்கெங்கோ சென்றுவிட்டேன். என்றாலும் எண்ணினால் இதற்கும் ஓர் இயக்கமா என்ற வேதனைதான்