பக்கம்:மக்கட் செல்வம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

சிறுவர்ப் பயந்த



குள் செல்க' என்று அனுப்பினான். ஆனால் அக்குழந்தை அவ்வாறு செல்ல மறுத்தது. எனவே வேறு செய்ய ஆற்றாதவனாகி அவன் அக்குழந்தையை அணைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். அந்தக் காட்சியை மனைத் தலைவி கண்டாள். இந்த அளவு நமக்குப் போதும். அந்த வகையில் தலைவனை வீட்டுக்குள் அழைத்து வந்து தனக்கு இன்பம் அளித்ததோடு, தலைவனையும் தீ வழியில் புகாமல் காத்த அந்தக் கான்முளையை எண்ணி எண்ணி வியக்கின்றான் அத்தலைவி. அச்செல்வத்தின் சிறப்பைத் தன் தோழியிடம் சொல்லிச் சொல்லி மகிழ்கின்றாள் அத் தலைவி. ஆம்! இம்மையில் அவர்களைச் சேர்த்து வைத்து ஈடற்ற இன்பத்தை அவர்களுக்கு ஈந்த அக்குழந்தை, அதன் தந்தை பரத்தையிற் பிரிவால் தவறிழைத்து மறுமையில் அதனால் பெற இருந்த அல்லலையும் நீக்கினான் அல்லனோ! இவற்றையெல்லாம் எண்ணிய செல்லூர்க் கோசிகன் கண்ணனார் அத்தலைவியின் வாக்கிலேயே பேசுகின்றார்.

'இம்மை உலகத்து இசையோடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்றி எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி' (அகம் 66)

என்ற ஆறு அடிகளும் ஆயுள் வரையில் படித்துப் படித்துப் பயின்று பயன்பெறத்தக்க அடிகளல்லவோ!

இந்த ஆறு அடிகளில் புலவர் கோசிகன் கண்ணனார் எவ்வளவு சிறப்பாகக் குழந்தைச் செல்வத்தின் ஏற்றத்தைப் பாராட்டிவிட்டார் என்பது நன்கு தெரிகிறதல்லவா! இந்த உலகில் பிறந்தார் புகழ் பெறவேண்டும். 'ஈதல் இசைபட வாழ்தல் அது வல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்று வள்ளுவர் இசைபட வாழ்தலையோ