பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, குற்றாலக் குறவஞ்சி முதலிய நூல்களில் குன்றில் வாழும் குறவனது தொழிலும், குறத்தி குறிசொல்லுதல், பிச்சையெடுத்தல் போன்ற குறிப்புகளும் உள்ளன. குறவன், குருவியையும் வனவிலங்குகளையும் பிடித்து நாட்டில் விற்பான், கழுதை மேய்ப்பான், கூடை முறம் கட்டுவான் என்றும்; குறத்தி, கூடைமுறம் கட்டுவதுடன், ஊர் ஊராகச் சென்று குறி சொல்லுதல், பச்சைகுத்துதல் போன்ற தொழிலும் செய் வாள் என்றும் உள்ளன. ஆனால், நரிக்குறவர் யாரும் குறி சொன்னதாகவோ, இப்பொழுதும் அத்தொழில் அவர் கனிடம் உள்ளதாகவோ அறிய முடியவில்லை. நரியினைப் பிடித்து அதன் இறைச்சியை உண்டு, எஞ்சிய பல், தோல், நகம் முதலியவற்றை விற்பதால் நரிக்குறவன் என்றும், குருவிகளைப் பிடிப்பதால் குருவிக்காரன் என்றும் இம் மக்களைக் குறித்தனர். ஆதலால், இவை காரணப் பெயரே யன்றி இயற்பெயர் அல்ல. நரிக்குறவர்கள் தம்மை வாக்ரி" என்றே கூறுகின்றனர். எளிய வாழ்க்கையினைக் கொண் டுள்ள இம்மக்களிடம் நிறைய நாடோடிப் பாடல்கள் உள்ளன. பாடி மகிழும் வானம்பாடிகளாக வாழ்ந்து, தமது மரபு, வரலாறு, கடவுள் வழிபாட்டுமுறை, பரம்பரை யினைத் தமது சந்ததியினருக்குப் புகட்டுகின்றனர். எழுதா இலக்கியமான அவர்களிள் நாடோடிப் பாடல்களின் கருத்தும், ஆரிய வரலாற்றில் சிலவும் ஒத்துள்ளன. தரிக்குறவர்கள் அனைவருமே தாய்க்கடவுள் வழிபாட்டி னர். தந்தைவழிக் குடும்ப அமைப்பையும் கூட்டுச் சமுதாய அமைப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சப்தமாதர் என வழங்கப்படும் பிராமணி (பிராமி, நாராயணி(வைஷ்ணவி), மாஹேசுவரி, கெளமாரி, வராகி, உருத்திராணி (மாகாளி), இந்திராணி (மாஹேந்திரி) ஆகிய எழுவரும் வெவ்வேறு பெயரினால் வணங்கப்படுகின்றனர். தலைவராக “தாதாஜி” என்ற கடவுளும், வீரத்திற்கு பிம் பர்க்கனுதே'வும் குறிக்கப்படுகின்றனர். குணேஹ ஆக்பாள் எனப் பிள்ளை யாரையும் வீரபத்திரனையும் வழிபடுகின்றனர். இத்