பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38 வனை மணக்கச் சம்மதிக்காவிட்டால் அவளுக்கு மருந் 3r-G arouli Qelig (Black magic witchcraft) 665uporth செய்து கொள்வதுண்டு. விதவைத் திருமணங்கள் நடை பெறுகின்றன. திருமணமுறை இருளர் இனத்தில் இரு அகமணக் குழுவில் ஏழு உட் பிரிவுகள் உள்ளன. 1. குப்பெ, 2. சம்பெ, 3. தெவனெ 4. கல்கட்டி, 5. குறுநகெ, 8. கொடுவெ, புங்கெ என்பன வாகும். இன்னொரு அகமணக் குழுவில் உப்பளிகெ, வெள்ளிளகெ, பேராத, போரிகெ, வெட்டகெ, பணிகெ ஆகிய ஆறு உட்பிரிவுகள் காணப்படுகின்றன. முதலில் குறிப்பிட்ட ஏழு பிரிவுகளில்தாம் பெரும்பாலான இருளர் கள் அடங்குவர். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் பற்றிக் கேள்வியுற்றுள்ளேன். ஆனால், அவர் களைப் பார்த்ததில்லை. ஒவ்வோர் ஊரிலும் கொத்துக் காரன்” என்றும் ஜாத்தி என்றும் பெரியவர்கள் இருக் கிறார்கள். கொத்துக்காரன் ஊருக்குத் தலைவன். ஜாத்தி என்னும் பெரியவன் திருமணம். ஈமச்சடங்கு, பெண் பூப்படைந்ததைக் கொண்டாடும் விழா (நெர அப்ப), குழந் தைக்குப் பெயரிடும் விழா போன்றவற்றை நடத்தி வைக் கிறான். ஒர் அக:ணக் குழுவிலுள்ள உட்பிரிவுகள் அனைத் துக்கும் ஒருவனே ஜாத்தியாக இருக்க முடியாது. ஒரு பிரி வைச் சார்ந்தவனுக்கு மாமன், மைத்துனன் அல்லது சம்பந்தம் செய்து கொள்ளத்தக்க பிரிவைச் சேர்ந்தவன் ஜாத்தியாக இருக்க இயலும். அகமணக் குழுவிலுள்ள உட் பிரிவுகளில் இன்ன பிரிவைச் சார்ந்தவன், இன்ன பிரிவில் தான் திருமணம் கொள்ள இயலும் என்பதையும் பின்வரும் பட்டியல் விளக்கும்.* குப்பெ என்ற பிரிவைச் சார்ந்த இருளர்கள் சம்பெ, கல்கட்டி, தெவனெ, கொடுவே, புங்கெப் பிரிவைச் சேர்ந்த வர்களை திருமணம் செய்து கொள்ளலாம்: ஜாத்தியாக நிய