பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲ 0 பட்டிருக்கும் தோரணங்களிலும் அவற்றை இன்றைக்கும் காணலாம், 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லாடம் என்ற நூல் வேலனாட்டச் சடங்கை விவரிக்கிறது. (25-1-16) உறவினர் கூடியிருக்கும் முற்றத்தில் முருகனது மஞ்ஞைக் கொடி (மயில் கொடி நடப்பட்டது தரை யெங்கும் வெட்சி மலர்கள் பரப்பப்பட்டன. தேக்கிலைகளில் இரத்தம் கலந்த தினைமாவு படைக்கப்பட்டது. நான்கு திசைகனை நோக்கி அவ்விலைகள் வைக்கப்பட்டன. வேலன் ஆட்டுக்குட்டியைப் பலி கொடுக்கிறான். ஈச்ச இலையால் வடிகட்டப்பட்ட கள்ளை அவன் குடிக்கிறான். பேரிகை அடித்து முருகனை அழைக்கிறான். கல்லாடத்தில் காணப் படும் விவரங்களிலேயே மிக முக்கியமானது, வேலனாட்டம் காடன்மலை நாட்டிலே நடத்தது எனப்படும் குறிப்பே អ៊ិន្ន័ខំ. o 10 ஆவது நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகளில் கேரளம் இப்பெயராலேயே குறிப்பிடப்படுகிறது, தென் னோலை, கடம்ப மலர்கள், சந்தனம், மஞ்சள் ஆகியவை, வேகனால் சடங்கின் போது பயன்படுத்தப்பட்டதைத் திரு முருகாற்றுப்படை விவரிக்கிறது. இவற்றில் கடம்ப மவரைத் தவிர, பிற பொருள்கள் எல்லாம் மலபாரில் தெய்யாட்டத் தின்போது, பிற ஆட்டக்காரர்களாலும் வேலனாலும் உப யோகிக்கப்படுகின்றன. இச் சடங்குக்காகப் போடப்படும் பந்தல் பற்றிச் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. தென்னங் குருத்தால் ஆக்கப்பட்ட தோரணங்களாலும் கடம்பமலர் செவ்வலரி மலர் மாலைகளாலும் பந்தல் அலங்கரிக்கப்பட்டது. மலபாரில் இந்த வழக்கம் இன்றும் வழக்கில் உள்ளது. திருமுருகாற்றுப்படையில் வேலன் இரத்தத்தில் நனைக்கப்பட்ட மலர்களையும், தினை மாவை யும் படைத்து இச் சடங்கை முடித்து வைத்தான் என்று கூறப்பட்டுள்ளது. பலவித இசைக் கருவிகளை இசைத்துக் குறிஞ்சிப் பாடலைப் பாடியவாறு சாம்பிராணி தூபம் காட்டுகிறான். மலபார் வேலனும் சடங்கின் போது சாம்