பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龛罗 கின்றது. மலையாள நாட்டில் பல தெய்வங்களுக்கும் பரவ லாகப் பல கிராமங்களில் இந்த ஆட்டங்கள் சிலமாதங்களில் நடைபெறுகின்றன. இந்த ஆட்டங்கள் ஒர் ஊரில் பகவதி ஆட்டத்துடன் தொடங்கி மற்றொரு ஊரில் பகவதி ஆட்டத் துடன் முடிவதாகக் கூறும் பழமொழியும் உள்ளது. பேடி யாட்டம்மா துறக்காணும் அம்மன்சேரி அம்மா அடைக் காணும்' என்பதே அப் பழமொழி. வட மலபாரில் பேடி யாட்டக்காவில் பகவதிக்குத் துலாநாளில் ஆட்டம் தொடங்கப்பட்டு அம்மன்சேரி பகவதி ஆட்டத்துடன் எல்லா ஆட்டங்களும் முடிவுறுகின்றன என்று கூறுவர். இந்தப் பகவதி ஆட்டங்களிலும், பிற தெய்வ ஆட்டங்களிலும் கொடுங்களுர் பகவதியின் பெயரைச் சொல்லி அழைக்கும் வழக்கையும் காண்கிறோம். என்னுடைய கொடுங்களுர் நேர் முத்தாச்சி ஆக்ஞை உண்டாயிட்டு' என்று ஆட்டக் காரன் தன் அதிகாரத்தை எடுத்துக் கூறுவதுண்டு. பகவதி யின் வணக்கம் எவ்வளவு முக்கியமானது என்பதையே இது காட்டுகின்றது. கொடுங்களூர் பகவதியின் கிளைகளென்று தீயர்களும், ஆசாரிகளும், முக்குவர்களும் கருதும் பகவதிக் காவுகளும் கேரளத்தில் உண்டு. அவற்றைச் சீர்மைக்காவு கள் என்றழைப்பர். இந்தச் சீர்மைபகவதி ரோகம் விதைப் பதாகக் கூறுவர். அதாவது, அம்மையை உண்டாக்குவாள் என்பர். கொடுங்களுர் பகவதிக்குத் தலைமையிடம் கொடுக்கும் சம்பிரதாயம் பகவதி கோயில்களில் பொது வாகக் காணலாம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி, தான் சோழ நாட்டுக் கற்புடைப் பெண்டிரின் மரபு வழியில் வந்த தாகக் கூறிக்கொள்வது போல், ஆதி பகவதியான கொடுங் களுர் பகவதியின் வழியாக வந்த பிற பகவதிகளும் தொழப் படுகிறார்கள். துன்பத்தில் உழன்று தெய்வமாக மாறிய பெண்களும் பகவதியாகக் கருதப்பட்டுத் தொழப்பட்டதைக் காணலாம். ஒரு பிராமணப் பெண் பகவதியாகத் தொழப் பட்டது ஒரே தோற்றப்பாட்டில் காணப்படுகின்றது. 'அம்மோன்மார் என்றும் திருமுன்புமோர் என்றும் தானப் பேருள்ள பிராமணருடைய கிருகமான தாழக்காட்டு