பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 முதலியவற்றைக் கொண்டு சமையல் செய்து, எல்லோருக் கும் உணவு கொடுப்பார்கள். மறுநாள் மூவர் சுடுகாட்டிற்குச் செல்வார்கள். அங்கு இறந்தவரின் சாம்பல், மற்றும் தலை, கைகால் எலும்பு களை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குப் போவார்கள். ஆற்றில் இவற்றை வைத்துத் தேங்காய், பழம் முதலியவற் தோடு சூட ஆராதனை செய்வார்கள். எலும்புகளை வேtதால்தல்ம்' எனுமிடத்தில் பத்திரப்படுத்திய பின், ஆற்றில் குளித்து விட்டு ஊருக்குத் திரும்புவார்கள். சாவு நிலை (தீட்டு) மூன்று நாட்களுக்கு மேற் கொள்ளப்படும். இம்மூன்று நாட்களுக்கும் யாதொரு வேலையும் செய்ய மாட்டார்கள். இத்தகைய சாவுச் சிறப்பிற்குப் பச்தாவ்' என்று கூறுவார்கள். பழங்காலத்தில் தொதுவர்களும் மற்றவர்களும் இவர் களுடைய சாவு விழாவிற்கு வருவார்கள். இறந்தவருக்காக எருமைகளைப் பலியிடும் வழக்கம் இவர்களிடையே இருந் தது. ஆனால், அப்பழக்கம் இன்று வழக்கில் மறைந்து விட்டது. பூசாரியின் வீட்டில் யாரேனும் இறந்து விட்டால், அவர் தம் கோயில் காரியங்களைச் செய்ய மாட்டார். அவ் வருடம் திருவிழாவும் நடைபெறாது. தேர்கார்ள் எனும் மருளாடி மற்றொருவரைப் பூசாரியாக நியமிப்பான். அவ்வாறு நியமிக்கப்பட்டவர் கோயில் காரியங்களையும், திருவிழாவையும் நடத்துவார். ஒவ்வோர் ஆண்டிலும் கூட்ல் மாதத்தில் குலதெய்வம் கம்பட்டராயருக்கு விழா எடுப்பார்கள். இவ் விழாவிற்கு, பாப்ம்" என்று பெயர். இவ் விழாவிற்கு முன், ஒரு சாவுச் சிறப்புக் கொண்டாடப்படும். அவ்வாண்டில் இறந்தவர் களுக்காக, அவர்களுடைய ஆவிகள் நல்நிலை அடைவதற் காகக் கொண்டாடப்படுகிறது. இதனை வர்தாவ்' என்று அழைக்கின்றனர். இத் தருணத்தில் கணவனை இழந்த