உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

மன்னன்‌ கடமை என்று மக்கள்‌ எண்ணினர்‌. இந்த எண்‌ணம்‌, வெளிப்படையான பேச்சாக, அடிக்கடி கிளம்புவதில்லை—தாங்கும்‌ புலியாக இருந்துவந்தது. மன்னன்‌, உரிமைகளின்‌ இருப்பிடம் மட்டுமல்ல, கடமையின்‌ இருப்‌பிடம்‌, என்றனர்‌ மக்கள்‌!

ஜேம்ஸ்‌, இதை அறவே மறுத்தான்‌—சார்லசும்‌ அவ்‌விதமே.

மன்னன்‌ பெறும்‌ அதிகாரம்‌ ஆண்டவனால்‌ அளிக்கப்‌படுவது என்ற தத்துவம்‌ பேசிய ஜேம்ஸ்‌, மக்களுக்கு மன்னன்‌ சில உரிமைகளை அளிக்கிறான்‌, ஆனால்‌ அளிக்‌கும்‌ கரமே அதனைத்‌ திரும்பப்‌ பறித்துக்கொள்ளவும்‌ கூடும்‌, என்று வாதாடினான்‌. சார்லஸ்‌ இந்த முறைக்‌காகப்‌ போராடினான்‌.

நீதி மன்றங்கள்‌, ஏற்கனவே அமுலில்‌ உள்ள சட்டங்‌களின்‌ துணைகொண்டு வழக்குகளிலே தீர்ப்பளிப்பதா, அல்லது அரசாள்வோனின்‌ விருப்பமறிந்தும்‌, அரசாள்வோனின்‌ ஆதிக்கத்துக்கு உகந்த விதமாகவும்‌ தீர்ப்பளிப்‌பதா, என்பதே கூட ஒரு பிரச்னையாக்கப்பட்டுவிட்டது.

மக்கள்‌, சட்டத்துக்கு உட்பட்டவர்கள்‌; அது போலவே ஆட்சியிலுள்ளவர்களும்‌ சட்டத்துக்குப்‌ பொதுவாக உட்படவேண்டும்‌, அதுதான்‌ நல்லாட்சியின்‌ இலட்சணம்‌ என்று மக்கள்‌ நீண்ட நாட்களாகக்‌ கருதி வந்தனர்‌. இதைக்கூட ஜேம்ஸ்‌ மதிக்க மறுத்தான்‌.

கோக்‌ எனும்‌ வழக்கு மன்றத்‌ தலைவர்‌, ஜேம்சின்‌ கருத்தை மறுத்தார்‌—உடனே அவரை வேலையினின்றும்‌ நீக்கிவிட்டான்‌ மன்னன்‌.

‘நட்சத்திர மண்டலம்‌’ என்ற பெயர்‌ படைத்த அரச நீதிமன்றத்திலே, அரசன்‌ ஆணையைக்‌ குலைக்கும்‌ செயல்‌ புரிந்ததாக, கோக்‌ மீது குற்றம்‌ சாட்டப்பட்டது.