44
ஹெனிரிடாவைத் திருமணம் செய்துகொள்ளும்போது, கத்தோலிக்கருக்கு உரிமைகள் “கூடுமானவரையில் வழங்குவதாக, சார்லஸ் ஒரு இரகசிய உடன்பாட்டுக்கு வந்திருந்தான். எனினும், பிரான்சு அதனைகூட அதிகமாக வலியுறுத்தவில்லை—ஆனால், பிரான்சு பிராடெஸ்ட்டெண்டுகளுக்குத் துணைநிற்க வேண்டும், பிரான்சு அரசுக்கு எதிராக, என்று, பக்கிங்காம் தூபமிட்டான். காரணம், மார்க்க நோக்கமல்ல என்பதை இரு நாடுகளும் பிறநாடுகளும் அறியும். பிரான்சு அரசியாருடன் பக்கிங்காம் தொடர்புகொண்டான் என்பதை ஊர் பேசிச் சிரித்தது. குட்டு வெளியானதும், பிரான்சிலே அவன் தங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமுண்ட காமுகன், பிராடெஸ்டெண்டுகளைக் காப்பதாகக் கூறிக் கொண்டு, பெரும் செலவில் கப்பற்படையைத் தானே தலைமைவகித்து நடத்திச் சென்று படுதோல்வி அடைந்து திரும்பினான். பணம் பாழாயிற்று; பகை வீணாக வளர்ந்தது, மதிப்பு மடிந்தது. மக்கள், இதனை எங்ஙனம் சகித்துக்கொள்வர். ஒரு தூர்த்தனுடைய போக்குக்கு, நாட்டுச் செல்வமும் செல்வத்தினும் சிறந்த தன்மானமும் பலியிடப்படுவதா என்று கேட்டனர்.
“நமது மதிப்பு அழிக்கப்பட்டுவிட்டது — நமது கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன—நமது மக்கள் மடிந்தார்கள்—எதிரிகளால் அல்ல, தற்செயலாக அல்ல, நாம் யாரிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோமோ, அவர்களால்!” என்று ஆவேசமுறப் பேசினார் சர். எலியட் எனும் மாமன்ற உறுப்பினர். மக்கள் மனதிலே, இந்தப் பேச்சு எவ்வளவு ஆவேச உணர்ச்சியை ஊட்டியிருக்கும்! நாட்டு மக்கள் அனைவரும், என்ன எண்ணிக்கொண்டிருந்தனரோ, அதை எலியட், மாமன்றத்திலே முழக்கமிட்டார்! தோல்வி துயர்தரத்தான் செய்கிறது. எனினும், அதன்