உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கண்களைக்‌ கசக்கியும்‌ பலன்‌ ஏற்படவில்லை. மக்கள் துணிந்துவிட்டனர்‌!

நான்‌ அழைத்தால்‌ கூடவேண்டும்‌, நான்‌ கை அசைத்தால்‌ கலையவேண்டும்‌, மாமன்றம்‌ என்பது இது தான்‌! என்று மன்னன்‌ பேசினான்‌; தனக்காக மட்டுமல்ல, எதிர்கால மன்னர்களுக்காகவும்‌, எனவே மக்கள், தங்‌களுக்கு அப்போது ஏற்பட்ட இடையூறுகளைக்‌ களைந்து கொள்வதற்காக மட்டுமல்ல, எதிர்காலச்‌ சந்ததிகளைக்‌ காப்பாற்றவும்‌, வழிவகை கண்டாக வேண்டுமென்று உறுதிகொண்டனர்‌.

பக்கிங்காமைக்‌ கண்டித்து எலியட்‌, டிகிஸ்‌, எனும்‌ இருமாமன்ற உறுப்பினர்கள்‌ பேசியதற்காக, மன்னன் இருவரையும்‌ அரண்மனைச்‌ சிறைக்கூடமான, ‘டவரில்‌’ தள்ளினான்‌, மாமன்றம்‌ இந்த அக்ரமத்தைத்‌ தாங்கிக்‌ கொள்ள மறுத்தது! நாடு கொதித்தது, பாதகம்‌ புரிகிறான்‌ பக்கிங்காம்‌. பணம்‌ பாழாகிறது, ஊழல்‌ நெளிகிறது உதவாக்‌கரைத்‌ திட்டமிட்டு கேவலமான தோல்வியைப்‌ பெறுகிறான், கடல்‌ கடந்துள்ள நாடுகளிலே பிரிட்டன்‌ ஏளனம்‌ செய்யப்படுகிறது, கடலிலே பிணங்கள்‌ மிதக்‌கின்றன. அதனைக்‌ கண்டித்தால் கொடுஞ்சிறையா! மாமன்றம் தன் உரிமையை இழக்க விரும்புமா? மக்கள் மாமன்றத்துக்குத் துணை நிற்கிறார்கள். மன்னன்‌ இதன் பொருளை அறிந்து கொள்ளவேண்டும். இங்ஙனம் எண்ணிய மாமன்றம்‌, எலியட், டிகிஸ் இருவரையும் விடுதலை செய்தாலொழிய; ஒரு செயலையும்‌ செய்யப்‌ போவதில்லை என்று கூறிவிட்டது! நாட்டின்‌ உரிமை முழக்கக்கோட்டம்‌, மாமன்றம்‌. அது பணி ஏதும்‌ செய்ய முடியாதென்று கூறிவிட்டது—மக்கள்‌ மனநிலை என்ன ஆகும்‌? மன்னன்‌ மிரண்டான்‌, பணிந்தான்‌. எலியட்‌, டிகிஸ்‌ இருவரும்‌ விடுதலை செய்யப்பட்டனர்‌; மாமன்றம்‌