உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

தைக் கெடுக்கும்‌ செயலாக இதனைக்‌ கருதினான்‌, கடுங்கோபம் கொண்டான்‌, மாமன்றத்‌ தலைவருக்குத் தாக்கீது அனுப்பி, கூட்டத்தைக்‌ கலைக்கும்படி கூறினான்‌, மாமன்றம்‌ மன்னனுடன்‌ போரிட்டுத்தான்‌ உரிமைகளைப்‌ பெற முடியும்‌ என்ற பாடத்தை அறிந்து கொண்டது. அதற்கான உள்ள உரமும்‌ பெற்றுவிட்டது. எனவே அவைத்தலைவர்‌, மாமன்றத்தைக்‌ கலைப்பதற்கு அறிகுறியாக எழுந்துபோக முயன்றபோது, ஹாலிஸ், வாலன்டைன் என்று இரு உறுப்பினர்கள், சர். ஜான் பின்ச் எனும் மாமன்றத் தலைவரைப் பிடித்திழுத்து பீடத்திலமர்த்திப் பிடித்துக் கொண்டனர், பேசவேண்டியதைப் பேசினர்!

மாமன்றத்தின்‌ ஒப்பம்‌ பெறாமல்‌ சுங்கவரி பெறுவது குற்றம்‌; மன்னனை அவ்விதம்‌ செய்யும்படி தூண்டுபவர் நாட்டுக்குத்‌ துரோகியாவர்‌.

யாரேனும்‌, அந்த வரியைச்‌ செலுத்தினால்‌, அவரும்‌ துரோகி என்றே கருதப்படுவார்‌.

மார்க்கத்துறையிலே நாடு விரும்பாத மாறுதல்களைப்‌ புகுத்துபவரும்‌, பெரும்‌ துரோகியே.

இவ்விதமான கண்டனத்‌ தீர்மானங்களை, நிறைவேற்றிய பிறகே மாமன்றம்‌ கலைந்தது.

மன்னன் ஆணையின்படி நடக்கத் துடித்த மாமன்றத் தலைவர், பீடத்தில்— அவர்‌ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்!!

மன்னன்‌ மாமன்றத்தைக்‌ கலைந்துபோகும்படி உத்‌திரவு பிறப்பித்திருக்கிறார்‌, கலைந்து செல்க! எனக்‌ கூற வந்த அதிகாரி, வாயற்படியில்‌! மாமன்றக்‌ கதவை இழுத்‌துப்‌ பூட்டிக்கொண்டு, கண்டனத்‌ தீர்மானத்தை நிறைவேற்றினர்‌—பிறகே கலைந்தனர்‌.