உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

விடுகிறானோ என்று கிலி கொண்டனர். மன்னனுடைய போக்கைக் கண்டு வந்தவர்களுக்கு, இதுவும் நடைபெறக் கூடும் என்றே தோன்றிற்று, அந்தத் திகில் அதிகமாவதற்குத் துணை செய்வதுபோலவே, பல நிகழ்ச்சிகள் இருந்து வந்தன.

போப்பாண்டவரால், எனிரிட்டா மூலம், பிரிட்டிஷ் கத்தோலிக்கர்களுக்குச் சில சலுகைகள் பெற்றுத் தர முடிந்தது. எனிரிட்டாவின் ஆதரவில் நடந்துவந்த தொழுகைத் தலத்தில், கத்தோலிக்கர் கூடித் தமது மார்க்க முறைப்படி தொழுகை நடத்தலாயினர். செல்வமும் செல்வாக்கும் படைத்த கத்தோலிக்கக் கனவான்கள், அரசின் துணைகொண்டு, இழந்த இடத்தைப்பெற்று போப்பாண்டவரின் 'பாததூளி' பிரிட்டிஷ் மண்ணிலே விழச்செய்ய இயலும் என்று நம்பிக்கை கொண்டனர்.

போப்பாண்டவரின் பிரதிநிதியாக பான்சானீ என்பவர் பிரிட்டனில் தங்கி, அரசியின் ஆதரவு பெற்று கத்தோலிக்க மார்க்கத்தை மீண்டும் புகுத்த முயற்சித்தார். இந்த முயற்சியைப் பான்சானீக்குப் பிறகு கான் என்பவர் தொடர்ந்து நடத்தினார்; மக்கள் மருண்டனர்; லாட்கூட மருட்சி அடைய நேரிட்டது; மன்னனை லாட் எச்சரித்தார், மன்னன் யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் திணற நேரிட்டது, மன்னனின் எதேச்சாதிகாரத்தைத் தடுத்திடாவிட்டால், கத்தோலிக்க மார்க்கத்தையும் சுமந்து தீரவேண்டி நேரிடும் என்று மக்கள் பயந்தனர்—பெரும்பாலோர், பிராடெஸ்ட்டென்டுகள்!

வென்ட்ஒர்த், பிரிட்டனில் அமுல் செய்ததுபோலவே ஐயர்லாந்து சென்று, அரசன் ஆணையை நிலைநாட்டினான். முறைகள் ஒரேவிதம், ஆனால் கடுமை மிக அதிகம். ஐயர்லாந்திலே, குடிஏறிக் கொட்டமடித்துவந்த பிரிட்டிஷா-