உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

கூட்டித்தான்‌ கரைசேர வேண்டும்‌ என்று எண்ணினான்‌–இஃதொன்றே போதாதா மாமன்றத்தின்‌ வலுவை விளக்‌கிட, என்று மக்கள் கூறிக்கொண்டனர். பதினோராண்டுகளாக நடைபெற்ற அடக்குமுறை ஆட்சி, மாமன்றத்தின் முன்பு விசாரணைக்குவந்து நிற்கும்‌! மக்களைக் கசக்கிப் பிழிந்து, சிறையில் தள்ளி, வெளிநாடுகளுக்குத் துரத்தி சித்திரவதை செய்து, ஆட்சி தன்‌ நிலையைக்‌ காப்பாற்றிக் கொள்ள முனைந்தது. மக்கள் பயந்தனர், பணியவில்லை! அடக்கு முறை தலைவிரித்தாடிற்று, எனினும்‌ அடிமை மனப்பான்மை ஏற்பட்டுவிடவில்லை. அஞ்சா நெஞ்சினர்‌, சரண்புகுந்து வாழ்வதை, சாவைவிடக்‌ கொடியது என்று கருதினர்‌—எலியட்டுகள்‌ எத்துணை! லில்பர்ன்கள்‌ பலப்பலர்‌! இவர்களுக்கு ஆட்சியாளர்‌ இழைத்த கொடுமைகளுக்கெல்லாம் பதில்‌ கூறித்‌ தீர வேண்டும்‌. மாமன்றம்‌ நோக்கிவருகிறான் மன்னன்‌. திரு ஓடு ஏந்தியபடி! அவன்‌ சிரத்தில்‌ முடி இருக்கிறது, கரத்தில்‌ சிறைக்‌ கதவின்‌ திறவுகோல்‌ இருக்கிறது, அவரைச்சூழ இருக்கின்றன மக்களைக்கடித்துக்‌ கொடுமை செய்யும்‌ வேட்டை நாய்கள்‌! மன்னன்‌, மாமன்றத்தை நாடுகிறான்‌! இந்த மன்றமின்றி ஆட்சி நடவாதோ! என்று ஏளனப்‌ புன்னகையுடன்‌ கேட்ட மன்னன்‌ வருகிறான்‌. ஸ்காத்லந்து மக்களால்‌ கிளம்பியுள்ள கடும்‌ போரை, லாட்‌ அறிந்துள்ள வெறிச்‌ செயலும், வெண்ட்ஒர்த்துக்குப் பழக்கமான அடக்கு முறையும்‌ ஒழித்துவிடாது—மக்‌களின்‌ ஒத்துழைப்பு வேண்டும்‌, அதனைப்‌ பெற்றுத்தர மாமன்றத்தால்‌ மட்டுமே முடியும்‌! மன்னன்‌ மாமன்‌றத்தை நாடுகிறான்‌, மாமன்றம்‌ மன்னராட்சி முறைபற்றி மக்கள்‌ கொண்டுள்ள கருத்தை எடுத்துரைக்கும்‌. மன்னன்‌ தோல்விப்பாதையிலே காலடி எடுத்துவைக்‌கிறான்‌, மக்களின்‌ துணையின்றி பகைமுடிப்பது முடி-